சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

croppedImg_556476504.jpeg

’யோலோ’ விமர்சனம்

Directed by : Sam.S

Casting : Dev, Devika, Badava Gopi, VJ NIkki

Music :Sagishna Xavier

Produced by : Mahesh Selvaraj

PRO : AIM

Review :

"யோலோ" சாம்.எஸ் இயக்கத்தில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சகிஷ்மா சேவியன். இந்த படத்தில் தேவ், தேவிகா, விஜே நிக்கி, ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

யோலோ என்ற யுடியூப் சேனல் மூலம் ப்ராங்க் வீடியோ எடுப்பதை தொழிலாக செய்யும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் நடக்காத திருமணத்தை நடந்ததாக சிலர் ஆதாரங்களுடன் நிரூபிப்பதோடு, அந்த திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். தங்களுக்கே தெரியாமல் தங்களது திருமண நடந்திருப்பதால் அதிர்ச்சியடையும், நாயகனும், நாயகியும் அதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். அவர்களது திருமண ரகசியத்தின் பின்னணி என்ன என்பதும், அதை அவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் தான் ’யோலோ-வின் கதை.

 

நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா இளமை துள்ளலோடு படம் முழுவதும் ஜொலித்திருக்கிறார்கள். இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பயாலஜி என அனைத்தும் கச்சிதமாக பொருந்துவதால் படம் முழுவதும் பார்வையாளர்கள் இந்த ஜோடி சிறப்பாகவே பொழுதுபோக்கியிருக்கிறது.

 

நாயகியை பெண் பார்க்க வரும் விஜே நிக்கியின் கதாபாத்திரம் திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்தாலும் அவர் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

 

ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

சகிஷ்மா சேவியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

சூராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக பயணிக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷின் பணியிலும் குறையில்லை.

 

ராம்ஸ் முருகன், சாம்.எஸ், பன்பு செல்வன், மகேஷ் செல்வராஜ் ஆகியோரது எழுத்தில் இளமை ததும்புகிறது. அதே சமயம் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

படத்தை இயக்கியிருக்கும் சாம்.எஸ், கதையை காமெடியாக சொல்ல முயற்சித்திருந்தாலும், சிரிப்பு சத்தம் என்னவோ குறைவாக தான் கேட்கிறது. வில்லன், கோமாவில் இருந்த வில்லி என்று படத்தில் ஏகப்பட்ட விசயங்கள் இருந்தாலும், எதையும் முழுமையாக சொல்லாததால், படம் சற்று தொய்வாகவே நகர்கிறது.

 

"யோலோ" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : சுமாரான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA