சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

croppedImg_1677107425.jpeg

’பல்டி’ விமர்சனம்

Directed by : Unni Sivalingam

Casting : Shane Nigam, Shanthnu, Selvaraghavan, Alphonse Puthren, Preethi Asrani

Music :Sai Abhyankkar

Produced by : STK Frames - Unni Sivalingam

PRO : Yuvaraj

Review :

"பல்டி" உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் எஸ்.டி.கே ஃபிரேம்ஸ் – சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாய் அபயங்கர். இந்த படத்தில் ஷேன் நிகம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களது நண்பர்கள் விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கும் கந்து வட்டி மாஃபியா செல்வராகவன், கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து மீண்டார்களா ? இல்லையா ? என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வதே ‘பல்டி’

 

நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஷேன் நிகம், கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி, வேகமாக செயல்பட்டு வியக்க வைக்கிறார்.

 

ஷேன் நிகமின் நண்பராக மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார்.  நல்லவரா அல்லது கெட்டவரா என்று புரிந்துக்கொள்ள முடியாத கதாபாத்திறத்திற்கு தனது நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரை இருப்பு கவனம் ஈர்த்தாலும், அவருக்கான முக்கியத்தும் மிக குறைவாகவே உள்ளது.

 

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருக்கும் பீஜியம்கள் கவனம் ஈர்க்கின்றன. அதே சமயம், அனிருத் இசையை கேட்டது போலவும் இருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை, ஆனால் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பனிக்கரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. காட்சிகளை தொகுத்த விதம் மிக கூர்மையாக இருந்தாலும், அதில் இருக்கும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். செல்வராகவன் மீது அடி விழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் தனது கத்திரி மூலம் தனி கதை சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் தனது அசத்தலான கட் மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்தாலும், அதன் நீளத்தின் மூலம் சற்று சோர்வடைய செய்துவிடுவதையும் மறுக்க முடியாது.

 

எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.

 

கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. சண்டைக்காட்சிகளின் நீளம் சற்று தொய்வடைய செய்தாலும், சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் புதிய யுத்திகள் அந்த குறையை மறந்து ரசிக்க வைக்கிறது.

 

வித்தியாசமாகவும், புதிதாகவும் எதுவும் இல்லை என்றாலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும் திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்றது என்று முழுமையான கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் உன்னி சிவலிங்கம், கபடி அணிகளுக்கு பஞ்சமி, பொற்றாமரை என்று பெயர் வைத்ததோடு, உதயசூரியன் என்ற மலையாளப் பாடல் மூலமாக மறைமுகமாக அரசியல் பேசி அமர்களப்படுத்தியிருக்கிறார்.

 

"பல்டி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

Verdict : வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி படம் ரசிக்கும்படியாக உள்ளது

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA