சற்று முன்
‘இரவின் விழிகள்’ விமர்சனம்
Directed by : Sikkal Rajesh
Casting : Mahendran, Neema Ray, Nizhalgal Ravi, Sikkal Rajesh, Scissor Manohar, Cheran Raj, Ancy Sindhu, Ashmitha
Music :AM Asar
Produced by : P.Mahendran
PRO : John
Review :
"இரவின் விழிகள்" சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில்பி.மஹேந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஏ.எம்.அசார். இந்த படத்தில் மஹேந்திரா, நீமா ரேய், நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன் ராஜ், அன்ஸி சிந்து, அஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களில் சிலர், தங்கள் வருமானத்திற்காகவும், தங்களின் தளங்களின் பிரபலத்திற்காகவும், சில எல்லை மீறிய செயல்களை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார் ? எதற்காக இப்படி செய்கிறார் ? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘இரவின் விழிகள்’.
கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹேந்திரன், அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார்.
கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தனது நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவை ஞாபகப்படுத்தினாலும், திரைக்கதைக்கு அவரது நடிப்பு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணப்பட்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “கருப்பு...” பாடல் வீரியம் மிக்கதாகவும், அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளை பளிச்சென்று படமாகி படத்தின் தரத்தை அதிகரிக்க செய்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் சில யுத்திகளை பயன்படுத்தியிருப்பது தெரிந்தாலும், அதையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆர்.ராமர், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து விறுவிறுப்பாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார்.
சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், கிளைமாக்ஸில் அண்ணன் - தங்கை பாசம் மூலம் செண்டிமெண்ட் காட்சிகளால் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.
பொருளாதார ரீதியாக கதை சொல்லல் மற்றும் காட்சிப்படுத்திய முறையில் சில குறைகள் இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு சொல்லப்பட வேண்டிய கதையாக உள்ள இப்படம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படம்.
"இரவின் விழிகள்8" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : தற்போதைய காலக்கட்டத்திற்கு சொல்லப்பட வேண்டிய கதை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















