சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

croppedImg_1660476199.jpeg

’மைலாஞ்சி’ விமர்சனம்

Directed by : Ajayan Bala

Casting : Sriram Karthick, Krisha Kurup, Munishkanth, Singampuli

Music :Ilayaraja

Produced by : Ajay Arjun Productions - Dr.Arjunan

PRO : Nikil Murugan

Review :

"மைலாஞ்சி" அஜயன் பாலா இயக்கத்தில் அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் - டாக்டர். அர்ஜுனன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை இளையராஜா. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திம், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

ஊட்டியில் ‘மைலாஞ்சி’ என்ற பெயரில் பறவைகள் பூங்கா நடத்தும் கிரிஷா குரூப், தன் விருப்பமில்லாத திருமணத்தில் இருந்து தப்பிக்க ஒரு இளைஞரை காதலிக்கிறார். ஆனால் அவர் சென்னைக்கு சென்று விடுகிறார். அதற்கிடையில், வனவிலங்கு புகைப்படக் கலைஞரான ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகி, அது மெதுவாக காதலாக மாறுகிறது.

 

ஆனால் கிரிஷா, தன் பழைய காதலை மறக்காமல், ஸ்ரீராம் கார்த்திக்கிடம் அந்த இளைஞரை தேடி சேர்த்துவைக்கச் சொல்கிறார். அவளை காதலித்திருந்தாலும், அவளது விருப்பத்திற்காக முயற்சி செய்யும் நாயகன், பின்னர் உண்மை உணர்வுகள் வெளிப்படும் போது வலியுடன் விலகுகிறார். இறுதியில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதே "மைலாஞ்சி"  படத்தின் கதை.

 

ஸ்ரீராம் கார்த்திக், அமைதியான காதலனாக தனது வேலையை நன்றாக செய்துள்ளார். உணர்வுபூர்வமான காட்சிகளில் அளவான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

 

கிரிஷா குரூப், இளம் பெண்ணின் குழந்தைத்தனமான மனநிலையை காட்ட முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் முழுமையாக பார்வையாளர்களை கவரவில்லை.  

 

முனீஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி இணையும் நகைச்சுவை காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை.

 

அதே நேரத்தில், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி, நாயகியின் சித்தியாக வரும் நடிகை, மாமனாக நடித்திருக்கும் கலையரசன் கன்னுசாமி உள்ளிட்ட மற்ற துணை நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேடங்களை முறையாக செய்துள்ளனர். அவர்கள் பெரிதாக மிளிராதிருந்தாலும், கதை ஓட்டத்திற்கு ஏற்ப சரியாக தங்களுடைய பங்களிப்பை தந்துள்ளனர். 

 

ஒளிப்பதிவாளர் செழியன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பசுமை நிறைந்த ஊட்டியை அழகாக படம்பிடித்து, காதல் காட்சிகளை கவிதைபோல் காட்டியுள்ளார்.

 

இசையில் இளையராஜா பாடல்கள் பெரிய தாக்கம் இல்லாவிட்டாலும், மென்மையான உணர்வை தருகின்றன. பின்னணி இசை இனிமையாக உள்ளது.

 

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கதை மெதுவாக நகர்ந்தாலும், அதை சீராக வைத்திருக்க முயற்சித்துள்ளார்.

 

இயக்குநர் அஜயன் பாலா காதல் உணர்வுகளை மென்மையாக சொல்ல முயற்சித்துள்ளார். சில காட்சிகள் அழகாக இருந்தாலும், கதை இன்றைய காலத்துக்கு ஏற்ற புதுமை இல்லாமல் பழைய பாணியில் நகர்வது குறையாக தோன்றுகிறது.

 

மொத்தத்தில் ‘மயிலாஞ்சி’ மெதுவாக நகரும், உணர்ச்சி மிக்க காதல் படம். வேகமான திருப்பங்கள் இல்லாமல், அமைதியான காதல் கதையை ரசிப்பவர்களுக்கு இது பொருத்தமான படம்.

 

"மைலாஞ்சி" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

 

Verdict : ரசிக்க பொறுமை தேவை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA