சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

croppedImg_1802697207.jpeg

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ விமர்சனம்

Directed by : Paul Raj

Casting : Paul Raj, Gayathri Rema, Swetha Sri, Ravi Mariya, Ambani Shankar, Pasanga Sivakumar

Music :Vijay Prabhu

Produced by : PR Productions - Paul Raj

PRO : Karthick

Review :

 

 

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ பால்ராஜ் இயக்கத்தில் பி ஆர் புரொடக்ஷன்ஸ் - பால்ராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை விஜய் பிரபு. இந்த படத்தில் பால்ராஜ், காயத்ரி ரெமா, சுவேதா ஸ்ரீ, ரவி மரியா, அம்பானி ஷங்கர், பசங்க சிவகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை கொண்டவர் பால்ராஜ். ஆனால் எந்த பெண்ணும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்ததால், 6 குழந்தைகள் போதும் என்று முடிவு செய்கிறார். அந்த ஆசையை ஏற்றுக்கொண்டதால் காயத்ரி ரெமாவை திருமணம் செய்கிறார்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதன் பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், இனி குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் பால்ராஜ் மட்டும் 6 குழந்தைகள் வேண்டும் என்ற தனது ஆசையில் உறுதியாக இருக்கிறார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது.

 

இந்நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜுக்கு நட்பு உருவாகிறது. காலப்போக்கில் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறுகிறது. இந்த உறவு காரணமாக கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

 

படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் இயல்பாக நடித்துள்ளார். மனைவி தன்னை தள்ளி வைக்கும் காட்சிகளில் அவர் காட்டும் ஏக்கம் மற்றும் வருத்தம் நன்றாக தெரிகிறது. பிறகு மற்றொரு பெண்ணின் நட்பு கிடைக்கும் போது அவருக்குள் ஏற்படும் மாற்றத்தையும் இயல்பாக காட்டியுள்ளார்.

 

நாயகனின் மனைவியாக நடித்துள்ள காயத்ரி ரெமா, இன்றைய காலத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதே சிரமமான நிலையில், 6 குழந்தைகள் வேண்டும் என்ற கணவரின் ஆசையை மறுக்கும் காட்சிகளில் பெண்களின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

மற்றொரு நாயகியாக நடித்துள்ள சுவேதா ஸ்ரீ, தனது தோற்றமும் இயல்பான நடிப்பும் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அப்பாவித்தனமாக பேசும் தோற்றம் இருந்தாலும், கதையில் வித்தியாசமான கதாபாத்திரமாக நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இவருக்காகவே இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ரவி மரியா, தனது அனுபவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். சில காட்சிகளில் வில்லத்தனமாகவும், சில இடங்களில் நகைச்சுவையாகவும் நடித்துள்ளார்.

 

அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

 

உதயனின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் காட்சிகள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜய் பிரபுவின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி உள்ளது. கே.சங்கரின் படத்தொகுப்பு கதையை சுவாரஸ்யமாக நகர்த்த உதவியுள்ளது.

 

இயக்குநர் பால்ராஜ், இன்றைய சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையை கதையாக எடுத்துக் கொண்டு அதை வணிக திரைப்படமாக சொல்ல முயற்சி செய்துள்ளார். மதுபழக்கம் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும், கணவன்-மனைவி இடையே புரிதல் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி மாறும் என்பதையும் படம் கூறுகிறது.

 

சில குறைகள் இருந்தாலும், வித்தியாசமான கதை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளால் படம் பார்ப்பவர்களை ஈர்க்கிறது.

 

"யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’" படத்திற்கு மதிப்பீடு 2.75/5

 

Verdict : மொத்தத்தில், குடும்ப உறவுகள் மற்றும் மனித ஆசைகளை பேசும் சுவாரஸ்யமான படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA