சற்று முன்
‘அனோமி’ விமர்சனம்
Directed by : Riaz Marath
Casting : Bhavana, Rahman, Shebin Benson, Vishnu Aghasthiya, Binu Pappu, Arjun Lal
Music :Harshavaradhan Rameshwar
Produced by : Kumar Mangat Pathak, Abhishek Pathak, Blitzkrieg Films, Bhavana, Aadith Prasasana Kumar
PRO : Venkatesh
Review :
‘‘அனோமி" ரியாஸ் மராத் இயக்கத்தில் குமார் மங்கட் பதக் , அபிஷேக் பதக், பிளிட்ஸ்க்ரிஏஜி பிலிம்ஸ், பாவனா & ஆதித் பிரசனாகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹர்ஷவர்தன் ராமேஸ்வர். இந்த படத்தில் பாவனா, ரஹ்மான், ஷெபின் பென்சன், அர்ஜுன் லால், பினு பப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தடவியல் நிபுணராக இருக்கும் பாவனா, ஒரு சாலை விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார். அந்த விபத்தில் உயிர் பிழைத்த அவரது தம்பி மனரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் அவரை காப்பாற்றி, சிகிச்சை அளித்து கவனித்து வருகிறார் பாவனா. தம்பியே தனது உலகம் என்று வாழ்கிறார்.
இதற்கிடையில், பாவனாவின் தம்பி போன்ற மனநிலையில் இருக்கும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அந்த வழக்கை போலீஸ் அதிகாரி ரஹ்மான் சாதாரணமாக கையாளுகிறார். சில நாட்களில் அதே முறையில் பாவனாவின் தம்பியும் இறந்து போகிறார்.
இந்த இரண்டு மரணங்களிலும் இருக்கும் ஒற்றுமையை கவனிக்கும் பாவனா, பிரேத பரிசோதனையில் கிடைத்த தகவல்களை வைத்து இது தற்கொலை அல்ல, கொலை என்று சந்தேகிக்கிறார். ஆனால் போலீஸ் முதலில் அதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையில் மூன்றாவது நபரும் அதே முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இதன் மூலம் இது தொடர் கொலை என்று உறுதி செய்யும் பாவனா, கொலையாளியை கண்டுபிடிக்கத் தானே விசாரணையில் இறங்குகிறார். கொலை நடந்த இடத்தில் கிடைத்த கார் டயர் தடயமும், உடலில் இருந்த அமிலம் பற்றிய தகவலும் மட்டுமே அவருக்கு கிடைக்கும் முக்கிய தடயங்கள். அந்த தடயங்களை வைத்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்? இந்த கொலைகளின் காரணம் என்ன? என்பதையே படம் விறுவிறுப்பாக சொல்லுகிறது.
படத்தின் நாயகியாக நடித்துள்ள பாவனா, மிகவும் அமைதியான ஆனால் வலிமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெரிய தடயங்கள் இல்லாமல் இருந்தாலும், கொலையாளியை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் படத்திற்கு விறுவிறுப்பை தருகின்றன.
போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஹ்மான், முதல் பாதியில் சாதாரணமாக தோன்றினாலும் இரண்டாம் பாதியில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது அமைதியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
பாவனாவின் தம்பியாக நடித்துள்ள ஷெபின் பென்சன், காதலனாக நடித்துள்ள அர்ஜுன் லால் மற்றும் மற்ற நடிகர்கள் தங்களது வேடங்களை நன்றாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் காட்சிகளை மிகவும் அழகாகவும் பதற்றத்துடன் காட்டியுள்ளார். கொலைக்கான காரணத்தை காட்சிகள் மூலம் விளக்கிய விதம் சிறப்பாக உள்ளது.
ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை கதைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. பின்னணி இசை படத்தின் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
படத்தொகுப்பாளர் கிரியன் தாஸ் காட்சிகளை வேகமாக நகர்த்தியதால் படம் சலிப்பில்லாமல் செல்லுகிறது.
இயக்குநர் ரியாஸ் மராத், ஒரு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சி செய்துள்ளார். குறிப்பாக கொலைக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக விளக்கிய விதம் புதுமையாக உள்ளது.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் வேகமாகவும் பரபரப்பாகவும் நகர்கிறது. புதிய கருத்தை திரையில் காட்சிகளாக சொல்லியிருப்பது இந்த படத்தின் பெரிய பலமாகும்.
பரபரப்பும் சஸ்பென்ஸும் நிறைந்த இந்த படம், வித்தியாசமான கதையும் நல்ல தொழில்நுட்ப வேலைப்பாடுகளும் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
"அனோமி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : "அனோமி" ஒரு விறுவிறுப்பான கிரைம்-சஸ்பென்ஸ் திரில்லர்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















