சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

croppedImg_1802861970.jpeg

'99/66' விமர்சனம்

Directed by : MS Murthy

Casting : Rachitha Mahalakshmi, Swetha, Sabari, Rohind, Bhavan Krishna, Singam Puli, Mullai, Kothandam, KR Vijaya, PL Thenappan, MS Murthy

Music :MS Murthy

Produced by : Mithra Pictures Pvt.Ltd - MS Murthy

PRO : Bhuvan

Review :

‘‘99/66" எம்.எஸ்.மூர்த்தி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஷிதா மஹாலக்ஷ்மி, ஸ்வேதா, சபரி, ரோஹிந்த், பவன் கிருஷ்ணா, சிங்கம் புலி, முல்லை, கோதண்டம், KR விஜயா, PL தேனப்பன், MS மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

நாயகி ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 66-வது வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அதே குடியிருப்பின் 99-வது வீட்டில் வசிப்பதாக சொல்லும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு உருவாகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்.

 

அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத்தின் தலைவர் மூர்த்தி இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சிக்கும் போது, ஒரு ஆந்தை தொடர்ந்து அவரை தடுத்து நிறுத்தும் விசித்திர சம்பவங்களும் நடக்கின்றன.

 

இதற்கிடையில், பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல திட்டங்கள் போடுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரச்சிதா அதிலிருந்து தப்பித்து விடுகிறார்.

 

ஒரு நாள் இரவு, ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதை ரச்சிதா பார்க்கிறார். உடனே குடியிருப்பில் உள்ளவர்களுடன் சேர்ந்து ஸ்வேதாவை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அப்போது ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், 99-வது வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

 

அப்படியானால் ரச்சிதாவுக்கு மட்டும் தெரியும் ஸ்வேதா யார்? அவர் ஏன் ரச்சிதாவை சந்திக்கிறார்? இரவு நேரங்களில் சுற்றும் மூர்த்தியின் ரகசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கு திகிலும் திருப்பங்களும் கலந்து பதில் சொல்லும் படம் தான் ‘99/66’.

 

படம் வழக்கமான திகில் படங்களின் பாணியில் இருந்தாலும், ஒரு குடியிருப்பை மையமாக வைத்து பல திருப்பங்களுடன் கதையை சொல்லியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

 

நாயகியாக நடித்துள்ள ரச்சிதா மகாலட்சுமி, காதல் காட்சிகளிலும், ஆவி புகும் காட்சிகளிலும் நல்ல முயற்சி எடுத்திருக்கிறார். ஆனால் அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்பு வெளிப்படவில்லை.

 

ஸ்வேதா நல்ல மனம் கொண்ட பெண்ணாக வரும் கதாபாத்திரத்தில் நினைவில் நிற்கிறார். சபரி மற்றும் ரோகிந்த் புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது வேடங்களை நன்றாக செய்துள்ளனர்.

 

சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரின் காமெடி பெரிதாக வேலை செய்யவில்லை. ஆனால் கே.ஆர். விஜயா, பவன் கிருஷ்ணா, பி.எல். தேனப்பன் போன்றோரின் கதாபாத்திரங்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன.

 

ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, ஒரே குடியிருப்பில் படம் எடுக்கப்பட்டாலும் பல்வேறு கோணங்களில் அதை அழகாக காட்டியுள்ளார். படத்தொகுப்பும் கலை இயக்கமும் கதைக்கு உதவியிருக்கிறது.

 

இயக்குநர் எம்.எஸ். மூர்த்தி, வழக்கமான திகில் கதையை எடுத்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி சொல்லியுள்ளார். மேலும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சாதி போன்ற தேவையற்ற விஷயங்களை மனிதன் கைவிட வேண்டும் என்ற கருத்துகளையும் படத்தில் சொல்கிறார்.

 

"99/66" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஒரு முறை பார்க்கக்கூடிய திகில் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA