சற்று முன்

150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |   

croppedImg_660740852.jpeg

'காதல் ரீசெட் ரிப்பீட்’ விமர்சனம்

Directed by : Vijay

Casting : Madumkesh, JiyaShankar, Arjun Ashokan, MS Bhaskar

Music :Harris Jayaraj

Produced by : D Studios & Maali and Manvi Movie Makers

PRO : Yuvaraj

Review :

"காதல் ரீசெட் ரிப்பீட்" விஜய் இயக்கத்தில் D ஸ்டுடியோஸ்  & மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் மதும்கேஷ், ஜியாசங்கர், அர்ஜுன் அசோகன், MS பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகி ஜியா சங்கர் மீது ஒருதலைக்காதல் கொண்ட இளைஞனாக மதும்கேஷ் நடித்துள்ளார். அவர் ஜியாவை தூரத்தில் இருந்து காதலித்து கொண்டே இருப்பார். ஆனால் ஜியா சங்கர், தனது நண்பரான அர்ஜுன் அசோகன் மீது காதல் கொண்டிருக்கிறார்.

 

இதற்கிடையில் ஜியா சங்கருக்கு நினைவிழப்பு (மரதி) ஏற்படுகிறது. அவர் தினமும் தூங்கி எழுந்த பிறகு, முந்தைய நாளில் நடந்ததை எல்லாம் மறந்து விடுகிறார். இந்த நிலையை பயன்படுத்தி, மதும்கேஷ் அவரிடம் தன்னை காதலனாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்த பொய் அவருடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதையே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் முக்கோண காதல் கதையாக சொல்கிறது.

 

நாயகன் மதும்கேஷ் அமைதியான, மனதில் காதலை வைத்துக்கொண்டு அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் இளைஞனாக இயல்பாக நடித்துள்ளார்.

 

அறிமுக நடிகையான ஜியா சங்கர் அழகிலும் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால், அவருக்கு நல்ல நடிப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.

 

அர்ஜுன் அசோகன் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மேலும் விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரின் அனுபவம் மிக்க நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

படம் முழுவதும் ஸ்காட்லாந்து போன்ற அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா அந்த இயற்கை அழகை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

 

இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் கதைக்கு நன்றாக பொருந்துகிறது.

 

மொத்தத்தில், முக்கோண காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். காட்சிகள் அழகாக இருந்தாலும், கதையில் பெரிய பிரமாண்டம் இல்லாதது சிறிய குறையாக தெரிகிறது. இருந்தாலும் கதாநாயகியின் நடிப்பும், காதல் உணர்வுகளும் இந்த படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது.

 

"காதல் ரீசெட் ரிப்பீட்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : மென்மையான காதல் கதையை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கக்கூடிய படம்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA