சற்று முன்
‘நீ ஃபாரெவர்''விமர்சனம்
Directed by : Ashokkumar Kalaivani
Casting : Sudharsan Govind, Archenaa Ravi, Prathu, Noble James, Vidya, Y Gee Mahendran, Nizhalgal Ravi, MJ Sriram, Rethika Srinivas
Music :Ashwin Hemanth
Produced by : Zhen Studios - Pugaz & Eden
PRO : AIM
Review :
"நீ ஃபாரெவர்" அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் சென் ஸ்டுடியோஸ் – புகழ், ஈடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அஷ்வின் ஹேமந்த். இந்த படத்தில் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிரதோஷ், நோபல் ஜேம்ஸ், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெத்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதல் திருமணத்தை விரும்பாத குடும்பத்தில் வளர்ந்த சுதர்ஷன் கோவிந்த், காதலை புரிந்து கொள்ள ஒரு செயலி உருவாக்க நினைத்து, போலியாக காதலிக்க முடிவு செய்கிறார். அதே நேரத்தில், வாழ்க்கையை தனியாக வாழ விரும்பும் அர்ச்சனா ரவி, ஒரு காதல் கதை எழுதுவதற்காக போலி காதலில் ஈடுபட முடிவு செய்கிறார். இப்படியாக சந்திக்கும் இவர்களின் “போலி காதல்” எப்படி உண்மையான காதலாக மாறுகிறது என்பதே கதையின் மையம்.
நாயகனாக நடித்துள்ள சுதர்ஷன் கோவிந்த், அமைதியான மற்றும் அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். காதலுக்கு முன் மற்றும் பின் அவரின் நடிப்பில் காணப்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது.
நாயகியாக அர்ச்சனா ரவி, கதையில் முக்கிய இடம் பெற்றாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், தனது பங்கை சரியாக செய்துள்ளார்.
துணை நடிகர்களான Y. G. மஹேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் கதையின் ஓட்டத்திற்கு உதவுகிறார்கள்.
ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டி காதல் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்துகிறது. அஸ்வின் ஹேமந்தின் இசை சராசரியாக இருந்தாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு துணை நிற்கிறது.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, காதல் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் மனதில் அது ஏற்படுத்தும் மாற்றங்களை எளிமையாக சொல்ல முயற்சித்துள்ளார். குடும்ப உணர்வுகளுடன் கதையை இணைத்திருப்பது நல்ல அம்சம்.
ஆனால், புதுமை குறைவாக இருப்பதும், திரைக்கதை சில இடங்களில் சாதாரணமாக நகர்வதும் படத்தின் பலவீனம். இருந்தாலும், போலி காதல் உண்மையான காதலாக மாறும் தருணங்கள் மனதை கவர்கின்றன.
"நீ ஃபாரெவர்'" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : ஒரு சிம்பிள் ரொமான்டிக் எண்டர்டெய்னர்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















