சற்று முன்
’லீடர்’ விமர்சனம்
Directed by : RS Durai Senthilkumar
Casting : Legend Saravanan, Sham, Andrea Jeremiah, Santhosh Prathap, Payal Rajput, Lal, 'Bahubali' Prabaharan, Amirtha Aiyer, VTV Ganesh, Iyal, Aishwarya, Mariam George, Pathmen, Yogiram, Velarunchalam, Niranjan Thomas, Aranthanki Nisha, “Adithya” Kathir, Bad
Music :Ghibran Vaibodha
Produced by : Legend Saravana Stores Productions
PRO : Nikil Murugan
Review :
"லீடர்" ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இந்த படத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா ஜெர்மையா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகரன், விடிவி கணேஷ், இயல், ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சாதாரண கார் மெக்கானிக்கான லெஜண்ட் சரவணனை மையமாகக் கொண்டு நகரும் ஆக்ஷன் கதை. மகளை மட்டுமே உலகமாகக் கொண்ட அவர், ஒரு சூழ்நிலையால் பெரிய குற்றவாளியை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்தப் போராட்டத்தில் அவர் யார், ஏன் இந்த அளவுக்கு செயலில் ஈடுபடுகிறார் என்ற பின்னணி தான் படத்தின் முக்கிய அம்சம்.
லெஜண்ட் சரவணன், தனது இரண்டாவது படத்திலேயே முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருப்பது இந்த படத்தின் முக்கிய பலம். ஆரம்பத்தில் எளிமையான மனிதராக தோன்றும் அவர், பின்னர் வரும் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் ஹீரோவாக பளிச்சிடுகிறார். குறிப்பாக அப்பா-மகள் உணர்ச்சி காட்சிகளில் அவர் காட்டும் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத், அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் கதையின் திருப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆண்ட்ரியா ஜெர்மையா, ஷாம் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நன்றாக கையாள்ந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி, படத்திற்கு ஒரு பிரமாண்ட தோற்றத்தை கொடுத்துள்ளார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன; பின்னணி இசை படத்தின் வேகத்துடன் இணைந்து பயணிக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், காட்சிகளை துல்லியமாக இணைத்து, படம் எங்கும் சலிப்பு இல்லாமல் நகர உதவியுள்ளார்.
இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில், ஒரு சாதாரண மனிதன் எப்படி பெரிய சக்தியாக மாறுகிறார் என்பதைக் கமர்ஷியல் அம்சங்களுடன் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். சில இடங்களில் லாஜிக் குறைகள் இருந்தாலும், அவை படத்தின் வேகத்தில் பெரிதாக தெரியாது.
மொத்தத்தில், ‘லீடர்’ ஒரு மாஸ் ஆக்ஷன் படம் மட்டுமல்ல, அதில் உணர்ச்சி கலந்து அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக அமைகிறது.
"Leader" படத்திற்கு மதிப்பீடு 4/5
Verdict : மாஸ் ரசிகர்களுக்கு மாஸான படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















