சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

croppedImg_68459402.jpeg

'பேட்டில்’ விமர்சனம்

Directed by : Narayanan.PA

Casting : Arjun Prabhakaran, Aradhya, Munishkanth, Saravana Subbiah, Subramaniam Siva, Suruli, Gayathiri

Music :Jeeva

Produced by : Elite Talkies - K.Baskaran

PRO : Nikil Murugan

Review :

"பேட்டில்" நாராயணன் பி இயக்கத்தில் பாஸ்கரன் கே தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை எம். ஜீவன். இந்த படத்தில் அர்ஜுன் அன்புடன், ஆராத்யா கிருஷ்ணா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா, திவியதர்ஷினி உமா, உறியடி சுருளி, தீகன் தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

ராப் பாடகராக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் அர்ஜுன் பிரபாகரன் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியையான ஆராத்யா காதலர்கள். அர்ஜுனின் கனவுக்கு வாய்ப்பு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்தி அவர் ஒரு பெரிய ராப் கலைஞராக உயர்கிறார். அவரது வளர்ச்சியால் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது.

 

இதற்கிடையில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடைபெறும் மோசடிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதிக்கின்றன. ஒரு மாணவி தற்கொலை செய்வது இந்த பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. இந்த அநீதியை உலகிற்கு எடுத்துச் சொல்ல ராப் பாடலை பயன்படுத்த வேண்டும் என்ற ஆராத்யாவின் எண்ணத்தை அர்ஜுன் நிறைவேற்ற முடிவு செய்கிறார். ஆனால், தனது வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதும் இசை நிறுவனம் அவரை தடுக்கிறது. மறுபுறம், பள்ளி நிர்வாகி சுப்பிரமணிய சிவா ஆராத்யாவை கொலை செய்ய முயல்கிறார். இந்த தடைகளை தாண்டி காதல் ஜோடி தங்கள் இலக்கை அடைந்தார்களா என்பதே "பேட்டில்" படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்துள்ள அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருந்தாலும், நடிப்பில் இன்னும் உறுதி குறைவாக தெரிகிறது. குறிப்பாக ராப் பாடும் காட்சிகளில் எதிர்பார்க்கப்படும் ஆற்றல் வெளிப்படாததால் தாக்கம் குறைகிறது.

 

நாயகி ஆராத்யா, இயல்பான நடிப்பாலும் அழகாலும் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை சரியாக எடுத்துச் சென்றிருப்பது படத்திற்கு பலம்.

 

வில்லனாக நடித்துள்ள சுப்பிரமணிய சிவா வழக்கம்போல் தனது அனுபவத்தால் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கிறார். சரவண சுப்பையா, முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்குகளை நன்றாக நிறைவேற்றியுள்ளனர்.

 

ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர் குறைந்த வசதியிலும் இயல்பான காட்சிகளை பதிவு செய்துள்ளார். நேரடி இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன.

 

இசையமைப்பாளர் ஜீவா, இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையிலும் தனித்துவமில்லாத பாடல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக ராப் பாடல்கள் தாக்கமின்றி இருப்பது படத்தின் மிகப்பெரிய குறையாகும்.

 

சுமாரான படத்தொகுப்பு மற்றும் கலை இயக்கம் 

 

கல்வி வணிகமாக மாறி, சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் விதத்தில் செயல்படுவது, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற சமூக பிரச்சனைகளை இயக்குநர் நாராயணன்.பி.ஏ தைரியமாக எடுத்துக் காட்டியுள்ளார். கலை ஒரு சமூக மாற்றத்தின் கருவியாக பயன்பட முடியும் என்ற கருத்தும் பாராட்டத்தக்கது.

 

ஆனால், நல்ல கருத்துடன் எடுத்துக்கொண்ட இந்தக் கதையை சுவாரஸ்யமாகவும் ஈர்க்கும் விதமாகவும் சொல்ல தவறியிருப்பது படத்தின் பெரிய குறையாகிறது.

 

"பேட்டில்" படத்திற்கு மதிப்பீடு 2.8/5

 

Verdict : நல்ல கருத்து இருந்தும், பலவீனமான திரைக்கதை, தாக்கமற்ற இசை காரணமாக முழுமையாக கவராத படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA