சற்று முன்

திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |    ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம்!   |    திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'சைலண்ட்' பட டிரெய்லர் வெளியீடு!   |    என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி   |    சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    அமெரிக்காவில் நடைபெறவுள்ள ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு!   |    'ஜீப்ரா' லக்கி பாஸ்கர் சாயலில் இருந்தாலும், விமர்சகர்கள் கதை புரிந்து பாராட்டுவார்கள்!   |    விரைவில் ஹாட்ஸ்டாரில் வெப் சீரிஸாக மீண்டும் வரும் 'ஆஃபீஸ்' தொடர்!   |    சீனா திரையரங்குகளில் தமிழ் பிளாக்பஸ்டர் படமான 'மகாராஜா'!   |    வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை!   |    ஒரு கமர்ஷியல் படத்தில் நான் நடிப்பது இதுவே முதல்முறை - நடிகை மடோனா செபாஸ்டியன்   |    கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன்! - நடிகர் ரஹ்மான்   |    காந்தாரா: பாகம் 1, அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது!   |    உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!   |    கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |   

விளையாட்டு செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை வீராங்கனை தீபிகாவுக்கு இரட்டை தங்கம்
Updated on : 10 February 2015

தேசிய விளையாட்டு போட்டியில் ஜார்கண்ட் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி இரட்டை தங்கப்பதக்கம் வென்றார். 

35-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரளாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 9-வது நாளான நேற்று வில்வித்தை மங்கை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி அசத்தினார். 

வில்வித்தை ரீகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, பம்பையலா தேவி உள்ளிட்டோர் அடங்கிய ஜார்கண்ட் அணி 6-2 என்ற கணக்கில் மணிப்பூரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெயந்த் தலுக்தருடன் இணைந்தும் தீபிகா குமாரி தங்கத்தை வசப்படுத்தினார். 

ஆனால் தனிநபர் பிரிவு தான் தீபிகாவுக்கு ஏமாற்றம் அளித்தது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி இதில் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை. வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்திலும் 2-6 என்ற கணக்கில் உத்தரபிரதேச வீராங்கனை சீமா வர்மாவிடம் அவர் தோற்றுபோனார். 

இதற்கிடையே, எதிர்பார்ப்புக்கு மத்தியில் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. நட்சத்திர நீளம் தாண்டுதல் வீரர் கேரளாவின் ரஞ்சித் மகேஷ்வரி தகுதி சுற்றில் தவறான தொடக்கம் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

அதே சமயம் கேரள வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா எதிர்பார்த்தது போலவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தை பிடித்தார். அவர் 15 நிமிடம் 31.37 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டித் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை ருசித்தார். மராட்டியத்தின் லலிதா பாபர் 2-வது இடத்தை (15 நிமிடம் 46.73 வினாடி) பெற்றார். 

நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் நடப்பு சாம்பியன் சர்வீசஸ் அணி 51 தங்கம் 16 வெள்ளி, 17 வெண்கலத்துடன் தொடர்ந்து முதலிடத்திலும், மராட்டிய அணி 27 தங்கம், 40 வெள்ளி, 29 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 27 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் நீடிக்கிறது. 

தமிழக அணி 10 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது. 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா