சற்று முன்
விளையாட்டு செய்திகள்
இந்திய பந்து வீச்சாளர்களிடம் நம்பிக்கையே இல்லை: கவாஸ்கர் பாய்ச்சல்
Updated on : 10 February 2015
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது. ஆஸ்திரேலிய அணி 371 ரன் குவித்தது. இந்தியா 265 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். இதேபோல் பேட்டிங்கும் சரியில்லை. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்திய அணி மீது முன்னாள் கேப்டனும், டி.வி. வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
இந்திய பந்துவீச்சில் முன்னேற்றம் இல்லை. நிறைய ஷாட்பிட்ச் பந்துகளை வீசினர். ‘யார்க்கர்’ வீசவில்லை. சுழற்பந்து வீச்சும் சாதாரணமாகவே இருந்தது. இந்திய பந்து வீச்சாளர்களிடம் நம்பிக்கையே இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அதை அவர்களால் மாற்ற முடியும். அதற்காக நேரம் இன்னும் இருக்கிறது. இது பயிற்சி ஆட்டம்தான். உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா