சற்று முன்
விளையாட்டு செய்திகள்
உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
Updated on : 10 February 2015
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 106 ரன்னில் தோற்றது.
2–வது பயிற்சி ஆட்டத்தில் இன்று புதுமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா (150), ரெய்னா (75), ரகானே (88 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கானி 44 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த நவ்ரோஸ் மங்கால் 60 ரன் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுக்க அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியோடு உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா