சற்று முன்
விளையாட்டு செய்திகள்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழு கால அட்டவணை!
Updated on : 12 February 2015
உலக கோப்பை போட்டிகள் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் அவை தொடங்கும் நேரம் குறித்த ஒரு பார்வை.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளுமே பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது
பிப்ரவரி, 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானுக்கு எதிராக. இடம்-அடிலெய்டு. நேரம்: காலை 9 மணி.
பிப்ரவரி, 22ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக. இடம்-மெல்போர்ன். நேரம்: காலை 9 மணி
பிப்ரவரி 28ம் தேதி, சனிக்கிழமை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக. இடம்-பெர்த். நேரம்: மதியம் 12 மணி.
மார்ச் 6ம் தேதி, வெள்ளிக்கிழமை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக. இடம்-பெர்த். நேரம்: பகல் 12 மணி.
மார்ச் 10ம் தேதி, செவ்வாய்க்கிழமை, அயர்லாந்துக்கு எதிராக. இடம்-ஹேமில்டன். நேரம்: காலை 6.30 மணி.
மார்ச் 14ம் தேதி, சனிக்கிழமை, ஜிம்பாப்வேக்கு எதிராக. இடம்-ஆக்லாந்து. நேரம்: காலை 6.30 மணி. காலிறுதி போட்டிகள்,
மார்ச் 18 முதலும், இறுதி போட்டி மார்ச் 29ம்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
(குறிப்பு: கால நேரம் அனைத்துமே, இந்திய நேரப்படி குறிப்பிடப்பட்டுள்ளது)
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா