சற்று முன்

’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |    திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!   |    ‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்   |    நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |   

விளையாட்டு செய்திகள்

ஐ.பி.எல் கிரிகெட் 2015 - பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தியது
Updated on : 11 June 2015

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 46–வது ‘லீக்’ ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. 

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், கெய்லும் விளையாடினர். கெய்ல் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

இருப்பினும் அடுத்து வந்த டிவில்லியர்ஸ், கோலி ஜோடி சிறப்பாக செயல்பட்டது. கோலி அரை சதம் அடித்தார். எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த டிவில்லியர்ஸ் சதம் விளாசினார். இதனால் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 133 ரன்னும், கோலி 82 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். 

236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பார்தீப் பட்டேல், லென்டில் சிம்மன்ஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பார்தீப் பட்டேல் 19 ரன்னுடன் அவுட்டாக. லென்டில் சிம்மன்சுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 15 ரன்கள் எடுத்த சர்மா (8.1) ஓவரில் வெளியேற அடுத்து பொல்லார்ட் அரை சதம் எடுக்க இருந்த நிலையில் (14.2) ஓவரில் 49 ரன்களுடன் வெளியேறினார். 

அடுத்து  வந்த ஹார்திக் பாண்டியா 8 ரன்களில் அவுட்டானார். பின்னர் ராயுடு (14), ஹர்பஜன் சிங் (3), சுசிட்ச் (4), சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். லென்டில் சிம்மன்ஸ் 68 ரன்களுடனும் மெக் கிளெனகன் (12) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குறித்த 20 ஓவர்களில் மும்பை அணியினரால் 235 ரன்கள் எடுக்க முடியாமல், 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.    


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா