சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

கவியரசருக்கே கவிதை எழுதிய பாடலாசிரியர்!
Updated on : 18 October 2016

மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் பாடலாசிரியர் வேல் முருகன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.



 



அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'நேரம்' படத்தில் வந்த 'காதல் என்னுள்' பாடல் மூலம் கவனம் பெற்ற வேல் முருகன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.



 



அடுத்ததாக கிடாயின் கருணை மனு , பட்டினம்பாக்கம் , நாகேஷ் திரையரங்கம் போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.



 



கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்காக வேல் முருகன் எழுதிய கவிதை:



 



நாலுபேருக்கு நன்றி



அந்த நாலுபேருக்கு நன்றி



என்று பாடினாய்



அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது



அந்த ரெண்டுபேருக்கு நன்றி



உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்



 



என் தாத்தா காலத்தில்



என் அப்பா அம்மா காதலிக்க



பாட்டையையும் கொடுத்தாய்



என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு



உன் பாடலால்



அமைதியையும் கொடுத்தாய்.



 



உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்



உன்பாட்டு ஓர் அண்ணை



அண்ணன் தங்கை



பாசம் என்றாலே



திசை காட்டும் உன்னை.



 



அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என



ஓடிஓடி உழைத்தவர்களை



அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது



'போனால் போகட்டும் போடா' என்று தேற்றியதில்



கோபத்தை மறந்து



சிரித்தவர்கள் எத்தனையோ..



கவிஞரைப் பாட எடம் பத்தலையே..



 



நீ நிரந்தரமானவன்



எப்ப செத்த ?



எந்த நிலையிலும்



மக்கள் மனங்களில் நிப்ப..!  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா