சற்று முன்
சினிமா செய்திகள்
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Updated on : 19 October 2016

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி - டி. ராஜேந்தர் நடிக்கும் படத்துக்கு "கவண்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு முன்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், இதற்கு பெயர் சூட்டப்படமாலேயே இருந்தது. இந்நிலையில் கவண் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அயன், கோ, மாற்றான், அனேகன் என தொடர்ந்து தூய தமிழில் வித்தியாசமான தலைப்புகளை தெரிவு செய்யும் கே.வி.ஆனந்த், இதிலும் அதனையே பின்பற்றியுள்ளனர்.
கல்பாத்தி எஸ் அகோரமின், AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நாயகியாக மடோனா செபஸ்டியன் நடிக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
ஏற்கனவே இதன் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, மூன்றாம்கட்ட படப்பிடிப்புக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளது.
இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் “பனி” திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு பான்-இந்தியப் படமாக உருவாகும் இப்படம் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், பூஜை நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் சார்பில் வினாயகா அஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதியுள்ள சஃபர் சனல் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை ஜோஜு ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, மற்றும் சஃபர் சனல் இணைந்து எழுதியுள்ளனர்.
'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , 'ஃபைவ் ஸ்டார் ' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.
'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்... அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்..படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.
கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.
Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.
மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!
குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’. பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப்பட்ட மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், 'கௌர்நாயுடு' எனும் வீரமிகுந்த கதாபாத்திரத்தில் அவர் மிரட்டும் வகையில், ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், ஆஸ்கார் விருது பெற்ற மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.
ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக , மார்ச் 27, 2026 அன்று "பெத்தி" படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக், வித்தியாசமான ராம்சரண் லுக், சிவராஜ்குமார் லுக் என, "பெத்தி" படம் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ).
பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர்.
படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத் திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது…
எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும். டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய் தத் சாருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும், நான் தர்ஷனுடன் ஜோகையா செய்யும் போதிலிருந்து சென்னையில் தான் டப்பிங், சிஜி எல்லாம் செய்து வருகிறோம். துருவ் சர்ஜா இப்படத்தில் கலக்கியிருக்கிறார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்து கொண்டதாவது…
சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன், ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படம் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் பிடிக்கும். கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம், துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார், அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகை ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டதாவது…
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள், நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம். எல்லோரும் பாருங்கள் நன்றி.
நடிகை ரீஷ்மா பகிர்ந்து கொண்டதாவது..
எங்களின் கேடி பட டீசரை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இது வெறும் டீசர் தான் படத்தில் இன்னும் பல ஆச்சரியம் இருக்கிறது. சஞ்சய் தத் சார், துருவ் சார், ஷில்பா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். துருவ் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிறைய டிப்ஸ் தந்தார். இப்படத்தை நீங்கள் பார்த்துப் பாராட்டுவதைக் கேட்க ஆவலுடன் உள்ளேன்.
நடிகர் துருவ் சர்ஜா பகிர்ந்துகொண்டதாவது…
எல்லோருக்கும் வணக்கம், இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார். இது நல்ல மாஸ் மசாலா படம் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சுப்ரீத் பகிர்ந்துகொண்டதாவது…
மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை எங்களிடம் கொண்டுவந்த பிரேம் சாருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நட்சத்திரங்களுக்கு நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
ஆக்ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ரீஷ்மா நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும் வகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
KVN Productions வெங்கட் கே.நாராயணா வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!
இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில் உலகெங்கிலும் "பறந்து போ" திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்.
இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!
'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' MCU உலகில் சில்வர் சர்ஃபர் மற்றும் கேலக்டஸுடன் மீண்டும் நுழையவிருக்கும் நிலையில், தமிழ்- தெலுங்கு என தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை பார்க்கலாம்.
மிஸ்டர் ஃபெண்டாஸ்டி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா (ரீட் ரிச்சர்ட்ஸ்):
கூர்மையான, பல அடுக்குகளுடன் உணர்வுப்பூர்வமான இந்த வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யா மிகப்பொருத்தமானவர். இந்த கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜ் இன்னும் ஆழமான மற்றும் கிரே ஷேட்ஸ் கொடுப்பார்.
இன்விசிபிள் வுமன் கதாபாத்திரத்தில் நயன்தாரா (சூசன் ஸ்டோர்ம்):
நிதானமான, கட்டளையிடும் மற்றும் வலுவான நயன்தாரா, அமைதியாக உறுதியுடனும் கட்டுப்பாடுடனும் அணியை வழிநடத்த முடியும்.
ஹியூமன் டார்ச் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா (ஜானி ஸ்டோர்ம்):
பொறுப்பற்ற, வசீகரமான, வீரம் மிக்க விஜய் -ஜானி ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போவார்.
தி திங் கதாபாத்திரத்தில் ஆர். மாதவன் (பென் கிரிம்):
பென் கிரிம் கதாபாத்திரம் பரிதாபம், வலிமை மற்றும் வலி இவற்றை கொண்டது. இவை மூன்றையும் மாதவன் தனது நடிப்பில் கொண்டு வர முடியும். அழகான அதே சமயம் சோகமான பின்னணியும் அவரது கதாபாத்திரத்திற்கு இருக்கும்.
கேலக்டஸ் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்:
கேலக்டஸ் வில்லன் மட்டுமல்ல! அவரது இருப்பு கடவுளை போன்றது. பிரபஞ்சத்தின் அச்சுறுத்தலையும் ஆழத்தையும் கோபத்தையும் கடத்த பிரகாஷ்ராஜ் தான் சரியான தேர்வு.
சில்வர் சர்ஃபர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி:
தெய்வீக தன்மையையும், ஆழமான உணர்வையும் சில்வர் சர்ஃபர் கதாபாத்திரத்தில் கொண்டு வர நடிகை சாய்பல்லவி சரியான தேர்வாக இருப்பார். சில்வர் சர்ஃபரை ஒரு வீழ்ந்த தேவதையாக, அழகான, குற்ற உணர்ச்சி கொண்ட, புரிந்துகொள்ள முடியாத சக்திவாய்ந்தவராக சாய்பல்லவி திரையில் கொண்டு வருவார்.
வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.
சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பில், D54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!
Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….,
தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது…
டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பேசியதாவது…
நானும் மீடியாவிலிருந்து வந்தவன். இங்கு ஒளிப்பதிவாளராக மேடையேறி இருப்பது மகிழ்ச்சி. நானும் சிவராஜும் சேர்ந்து குறும்படங்கள் வேலை பார்த்துள்ளோம். நான் பொள்ளாச்சி போன போது, சிவராஜ் சொன்ன கதை தான் இது. சிவராஜ் இதை டெவலப் செய்த பின்னர் கலையரசன் அண்ணாவிடம் கதை சொன்னோம். கதை கேட்டவுடன் அவர் இந்த கதாபாத்திரம் செய்ய ஆசைப்படுவதாகச் சொன்னார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. சாம் சிஎஸ் இசை இந்தப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
நடிகர் பிரேம் குமார் பேசியதாவது…
இந்தப்படம் டைட்டில் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது, டைட்டிலை மாற்றி விடாதீர்கள் அப்போது தான் டிரெண்டிங்கில் இருக்கும் என்று சொன்னேன். ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை இப்படம் பேசியுள்ளது. கலையரசன் தம்பி தான் எனக்கு போன் செய்து, இந்தக் கேரக்டர் செய்ய வேண்டும் என்றார். கலையரசன், பிரியாவுடன் நடித்தது நல்ல அனுபவம். இயக்குநர் சிவராஜ் அதிர்ந்து கூட பேச மாட்டார். இந்தப்படம் ஷூட்டிங் நல்ல அனுபவமாக இருந்தது. சாம் சிஎஸ் இசையில் அசத்தியுள்ளார். இந்தப்படம் பார்த்து, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஶ்ரீகாந்த் பேசியதாவது…
ஒரு மதிய வேளையில், கலையரசன் அண்ணா கூப்பிட்டிருந்தார், அப்போது பேச்சு வாக்கில் ஆரம்பித்த படம், அங்கு ஆரம்பித்த படம், கலையரசன், பிரியா, சிவராஜ் எல்லோரின் உழைப்பில் இங்கு வந்துள்ளது. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் பெசண்ட் ரவி பேசியதாவது…
இப்படத்தை 20 நாட்களில் ஒரு வீட்டுக்குள் எடுத்துள்ளார்கள், ஆனால் முடிந்த அளவு மிகச்சிறப்பாக, மிக அழகாக எடுத்துள்ளனர். நாம் எத்தனை படம் செய்தாலும் டிரெய்லர் பார்க்கும் போது, அந்தப்படம் நன்றாக வந்துள்ளதா? எனத் தெரிந்துவிடும். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. சாம் சிஎஸ் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கலக்கியுள்ளார். சின்ன இடத்தில் லைட் செய்வது கடினம் ஆனால் அழகாகச் செய்துள்ளார். கலையரசன் சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இருந்து தெரியும், இப்போது அவரது படங்கள் பார்க்கும் போது அவர் நடிப்பைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது. கலக்கி வருகிறார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். நிறை குடம் தளும்பாது எனச் சொல்வார்கள், அது போலத் தான் இயக்குநர் சிவராஜ். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் அலெக்ஸாண்டர் பேசியதாவது…
நண்பர் ஹரி தான் இந்தப்பட வாய்ப்பை வாங்கித் தந்தார். நான் சினிமாவில் மிகவும் தாகமுள்ள நடிகன். என் ஆசைக்கு மிக நல்ல கதாபாத்திரத்தை இயக்குநர் சிவராஜ் தந்துள்ளார். முகம் வராத ஒரு கேரக்டர். எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு அழகான தத்துவத்தை இந்தப்படம் மூலம் பேசியுள்ளார் இயக்குநர். சாம் சிஎஸ் இசைக்கு நான் ரசிகன், இந்தப்படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரிய படம் என எதுவுமே இல்லை, ஜெயிச்ச படம் ஜெயிக்காத படம் அவ்வளவு தான். இப்போது ஜெயித்துள்ள படங்கள் எல்லாம் சின்ன படங்கள் தான். கலையரசன் தான் முதலில் கால் பண்ணி, இந்தப்படம் பற்றி சொன்னார். இதில் இரண்டு பேர் மட்டும் நடிப்பதாகச் சொன்னார். கதை முழுதாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. நாம் இப்போது எல்லோரும் ஆன்லைனில் அடிமையாகி, லைக்குக்காக காத்திருக்கிறோம். இந்தப்படம் ஆன்லைன் மோகத்தை, அது எப்படி மனுஷனை மாத்துகிறது என்பதை அழுத்தமாகப் பேசியுள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சிவராஜ் இதற்கு முன்னால் போலீஸில் இருந்துள்ளார். எல்லோரும் ஐடியில் இருந்து வருவார்கள், இவர் போலீஸில் இருந்து வந்துள்ளார். அவருக்கு சினிமா தாகம் இருக்கிறது. கதையாக இப்படம் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் நேரில் தினசரி சந்திக்கும் மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது. எல்லோரும் அருமையாக பெர்ஃபார்ம்ஸ் செய்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்துள்ளானர். அனைவரும் படத்தை ரசிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.
நடிகை பிரியாலயா பேசியதாவது…
டிரெண்டிங் படம் வரும் 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது. என் தாய் தந்தைக்கு நன்றி. படக்குழுவிற்கு நன்றி. இப்படம் ஆடிசன் முடிந்த போது சந்தோசத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது. ஆக்டிங் ஸ்கோப் உள்ள படம், கலையரசன் சார் கூட நடிக்க வேண்டும். இது ஒரு எமோசனல் ரோலர் கோஸ்டர். இப்படத்தில் நடித்தது உண்மையில் மிக நல்ல அனுபவம். பெயரிலேயே கலைக்கு அரசன் என வைத்துள்ளார். உண்மையில் அவர் கலைக்கு அரசன் தான். இப்படத்திற்கு சாம் சிஎஸ் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். இசையோடு படம் பார்க்க அருமையாக உள்ளது. அனைத்து கலைஞர்களும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளனர். சோஷியல் மீடியா யூஸ் பண்ற எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும், நன்றி.
இயக்குநர் சிவராஜ் பேசியதாவது..,
இந்த இடத்திற்கு வர முக்கியமான காரணம் பிரவீன் தான், நான் ஊரில் இருக்கும் போது, ஷார்ட் ஃபிலிம் எழுதிக்கொண்டிருந்தேன், பிரவீன் உதவியால் தான் அந்தப்படம் நடந்தது. அது தான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. இந்தக்கதை பிரவீனிடம் சொன்ன போது அவர் கலையரசனிடம் அழைத்துப் போனார், ஒன்லைன் சொல்லி உடனே ஓகே ஆகிவிட்டது. இது சோஷியல் மீடியா தம்பதி பற்றிய கதை. நான் மினிமிலிஸ்ட் படம் செய்யலாம் எனத் தான் ஆரம்பித்தேன் ஆனால் கலையரசன், சாம் சிஎஸ் என பெரிய படம் ஆகிவிட்டது. சாம் சிஎஸ் அனுபவம், திறமை இப்போது திரையில் பார்க்கும்போது தெரிகிறது. நாங்கள் இந்தப்படம் செய்யும் போது, 22 படங்கள் அவர் கையிலிருந்தது. இந்தப்படம் செய்ததற்கு நன்றி. தயாரிப்பில் முழுமையாக எனக்கு ஆதரவு தந்தார்கள், எனக்கு உறுதுணையாக இருந்த ஶ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி. இது உருவாக்கத்தில் சின்ன படம் ஆனால் பேசும் விசயத்தில் பெரிய படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன். நன்றி.
நடிகர் கலையரசன் பேசியதாவது…
என் கேரியரில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். நான் ஹீரோவாக பல படங்கள் செய்துள்ளேன் அதில் இது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும். வேறொரு படம் செய்வதாக ஆனந்த் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம், சிவராஜ் இந்தக்கதை சொன்ன போது எல்லோருக்கும் பிடித்தது. அவரை நோலன் என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம். அவரைப்பார்த்தால் போலீஸில் இருந்தவர் போலவே தெரியாது. மிகத்திறமையானவர். குறைந்த ஆர்டிஸ்ட் வைத்து 2 மணி நேரம் உட்கார வைப்பது ஈஸியான விசயமில்லை, அதை சிவராஜ் செய்துள்ளார். மியூசிக் கேமரா, நடிப்பு எல்லாம் சேர்ந்து தான் ஒரு சினிமாவில் மேஜிக் நடக்கும். சாம் சிஎஸ் மிக பிஸியாக இருந்தார், ஆனால் நாங்கள் கேட்டதற்காகச் செய்து தந்தார். பிரவீன் அவரோட சொந்தப்படம் போல அக்கறை எடுத்துக்கொண்டு செய்தார். இருவரால் இப்படத்தில் மேஜிக் நடந்துள்ளது. அலெக்ஸ் இதில் முகமில்லாமல் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். முகமே தெரியாமல் இருந்தாலும் நடித்தற்கு நன்றி. தயாரிப்பு தரப்பு முழு நம்பிக்கை வைத்தார்கள் அவர்களுக்கு நன்றி. நண்பன் ஶ்ரீகாந்த் இப்படம் முழுமையாக முக்கிய காரணம் அவனுக்கு நன்றி. தயாரிப்பில் முழு வேலையும் பார்த்தார். என் மனைவி பிரியா தான் உடை அலங்காரம் செய்துள்ளார் அவருக்கு நன்றி. இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். கண்டிப்பாக "டிரெண்டிங்" நல்ல படமாக இருக்கும் நன்றி.
சோஷியல் மீடியா குடும்பத்திற்குள் நுழைந்து, எந்தளவு வாழ்க்கைக்குள் சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை, பரபர சம்பவங்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் அழுத்தமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர்கள் கலையரசன் நாயகனாக நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார், பிரேம்குமார் பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா