சற்று முன்
சினிமா செய்திகள்
இயக்குனர் அகத்தியனின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார்
Updated on : 21 October 2016

பிரபல திரைப்பட இயக்குனர் அகத்தியன் அவர்களின் மனைவி திருமதி ராதா அகத்தியன் மாரடைப்பால் இன்று (21.10.2016) உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அம்மாயாரது இறுதி ஊர்வலம் நாளை அவரது இல்லத்தில் இருந்து துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அகத்தியன் - ராதா தம்பதிக்கு கார்த்திகா, விஜயலக்ஷ்மி, நிரஞ்ஜனி என மூன்று மகள்கள் உள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில்
தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு.. எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு.. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி..
ஹெவன் பிக்சர்ஸ் சந்துரு அவர்கள் பேசியது :
உசுரே படத்தை பற்றி சொல்லனும்னா ரொம்ப அழகா வந்துருக்கு படம்.. மவுலி சாருக்கு நன்றி இசை மற்றும் படம் ரொம்ப அழகாவே வந்திருக்கு.. இந்த படத்திற்கு சப்போர்ட் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஒளிப்பதிவாளர்மார்கி சாய் அவர்கள் பேசியது :
அனைவருக்கும் வணக்கம் இந்த படம் பண்ணும்போது அவளோ சிறப்பா இருந்துச்சு 22 நாட்களில் எடுத்த படம் இது.. எனக்கும் இயக்குனர் நவீனுக்கும் ஒரு கம்பர்ட் சோன் இருந்தது... இந்த மூவி ஷூட் விரைவாக முடிந்ததில் கொஞ்சம் வருத்தம் இருந்தது.. ஏனெனில் எங்க இரண்டு பேருக்கும் அவ்ளோ நெருக்கம் இந்த படத்துல கிடைச்சது...இந்த படம் மண் சார்ந்த படம்.... என் கூட ஒத்துழைத்த என் டெக்னீசியன்ஸ் அனைவருக்கும் நன்றி... இதுதான் என் முதல் படமும் முதல் மேடையும் கூட அதனால் பத்திரிக்கையாளர் ஆகிய நீங்கள் இப்படத்திற்கு சப்போர்ட் பண்ணனும் என்று கேட்டுக் கொண்டார்...
11 இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் மியூசிக் ரொம்ப நல்லா இருந்துச்சு டீஜே ரொம்ப நல்லா பன்னிருக்காரு.. உங்களை அசுரன் படத்தில் பார்த்தது. அதுக்கப்புறம் இப்ப பார்க்கிறோம்.. தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு..அடுத்தடுத்து அதிகமான படங்கள் அமைந்து வெற்றி பெறனும்னு வாழ்த்துகிறேன்... என்றுமே அழியாத கிராமத்து காதல் கதை இது கைவிடாது உங்களை..... இந்த உசுரே டீம் கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் சத்யா பேசியது.... எல்லாருக்கும் வணக்கம் டைட்டில் உசுரே இன்னும் கேட்கும் போது எனக்கு நம்ம இசைப்புயலோட உசுரே நீதானே னு ஒரு வைப் கிடைச்ச மாதிரி, அதே வைப் இந்த படத்துக்கும் கண்டிப்பா கிடைக்கும்னு நான் நினைக்கிறேன்... தனது முதல் படத்திலேயே அருமையான இசையை கொடுத்திருக்காரு இசையமைப்பாளர் கிரன் ஜோஸ்.. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
ட்ரீம் வாரியர்ஸ் குகன் அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.. டிஜெய் ஒரு சிறந்த இசையமைப்பாளர் கூட.. நல்ல நண்பர்.. கிரண் ஜோஸ் க்கு வாழ்த்துக்கள் உசுரே.. இந்த நியூ டீமோட இணைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி... இயக்குனர் நவீன் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்காரு.. இந்த படத்தை ஒரு நேட்டிவிட்டி சப்ஜெக்டோட கொடுத்திருக்காரு. எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கணுமோ அந்த அளவுக்கு உண்மை தன்மையோடு இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நவீன்.. ஒரு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஆன நட்பு எந்த அளவுக்கு இருந்தா ஒரு நல்ல படம் கிடைக்கும் ன்ற அளவிற்கு இந்த படம் இருக்கு... தனது முதல் படத்திலேயே இந்த அளவிற்கு ஒரு தரமான படத்தை கொடுத்ததற்கு இந்த டீமோட ஒத்துழைப்பு முக்கிய காரணம்.. இயக்குனர் நவீனுக்கு எனது வாழ்த்துக்கள்.
இயக்குனர் சுப்ரமணிய சிவா அவர்கள் பேசியது....
விஜய் யும் அஜித்தும் இருந்தவரை வந்த காதல் சினிமா சமீபத்தில் காதலே இல்லாத தமிழ் சினிமாவாக ஆயிடுச்சு.. அதோட துவக்கமா இந்த உசுரே படத்தை பார்க்கிறேன்.. பொருளாதாரத்தை மட்டுமே நோக்கி ஓடுகின்ற இந்த உலகத்துல ஒரு மனிதனுக்கு காதல் இருந்தா அவன் எந்த சஞ்சலமும் இல்லாமல் அமைதியாக இருப்பான்.. உற்சாகமான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் கிரண் ஜோஸ்.. தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக டிஜே வருவாரு... டிஜே ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட அவர் நடிக்கிற படத்துல மற்றொரு இசையமைப்பாளரை வரவேற்று பெருந்தன்மையாக நடந்திருக்கிறார்... அவருக்கும் என் வாழ்த்துக்கள்... படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
நடிகை மந்த்ரா அவர்கள் பேசியது :
அனைவருக்கும் வணக்கம் உதயகுமார் அவர்களுக்கு நன்றி.. ரொம்ப நாளைக்கு அப்புறமா மறுபடியும் தமிழ்ல படம் பண்ணனும்னு ஒரு ஆசை.. அதற்கான நேரத்திற்காக காத்திருந்தபோது.. இயக்குனர் நவீனும் தயாரிப்பாளர் மவுலியும் இந்த கதையை சொல்லும்போது நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.. ஒரு இண்டிபெண்டன்ட் உமனா சேலஞ்ச் இருக்கிற கேரக்டரா நடிச்சிருக்கேன்.. ஒரு படத்திற்கு நான்கு தூண்கள் கண்டிப்பாக தேவை அந்த வகையில் இந்த படத்திற்கு நான்கு தூண்களாக ப்ரொடியூசர் டைரக்டர், டிஓபி, அண்ட் மியூசிக் அமைஞ்சிருக்கு.. அடுத்து ஹீரோ டீஜய்,, அவர் செட்டில் பார்த்தீங்கன்னா நல்ல கலகலப்பாக இருந்தாலும் ஷாட் னு சொல்லும்போது அந்த கேரக்டராவே மாறிடுவாரு அந்த அளவுக்கு டெடிகேட்டிவ் அடுத்து ஜனனி, ஜனனி என் பொன்னாகவே மாறிட்டாங்க.. உசுரே படத்துக்கும் எனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
ஆர் வி உதயகுமார் அவர் பேசியது - அனைவருக்கும் வணக்கம்... பத்தோட பதினொன்னா இந்தப் படம் இருக்கும்னு தான் நினைச்சுகிட்டு வந்தேன் ஆனால் இதை நம்பர் ஒன் படம் ... இயக்குனரோட ஒரு நாலு ஷாட் பார்த்தாலே இவன் தேறிடுவான்னு எனக்கு தெரிஞ்சிடும்.. அந்த வகையில் இயக்குனர் நவீன் நீங்க பாஸ்.. எமோஷனை வரிகளில் கொண்டு வருவதே சிறந்த பாடலா சிரியருக்கான இலக்கணம் அந்த வகையில லால் நீங்க சிறந்த வரிகளை எழுதி இருக்கீங்க.. வாழ்வியல்ல நடக்கிற விஷயங்களை உணர்ந்து எமோஷனால் எழுதற வரிகளுக்கு ஒரு நல்ல இசை கிடைத்திருக்கு.. வெட்டு குத்து ரத்தக்களரி யான தமிழ் படங்கள் வந்து போன நிலையில், அடுத்து வந்தவர்கள் போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... , காதலை புன்முறுவலோடு ரசித்து கொடுக்கும் காதல் படங்களை எடுக்க வேண்டும்... ஒரு புது டீமுக்கு சுதந்திரத்தை கொடுத்து ஒரு நேர்த்தியான படத்தை எடுத்த தயாரிப்பாளர் மௌலிக்கு என் வாழ்த்துக்கள்
இசையமைப்பாளர் அவர்கள் பேசியது : உசுரே படத்துக்காக நிறைய வேலை பாத்துருக்கோம் நீங்க தான் சப்போர்ட் பண்ணனும் டீஜே பிரதர் இசையமைப்பாளர் சிங்கர்... இருந்தும் இப்படத்தில் எனக்கு சப்போர்ட்டாக இருந்ததற்கு மிகவும் நன்றி ... தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் உசுரே படத்திற்கு பத்திரிக்கையாளரான நீங்கள் எங்களுக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... . இந்த உசுரே படத்தில் பாடிய சித்ரா அம்மா, சின்மயி அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
நடிகர் சிவா பேசியதாவது..
இந்த டீமை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சின்ன டீம்மாக இருந்தாலும் ஒரு நேர்த்தியான டீமா தெரியுது... இந்த டீமோட மேக்கப் சசிகுமார் தான் என்னுடைய மேக்அப் மேன்.. நேஷனல் அவார்டு வின்னர்..அவர் இந்த படம் நல்லா வரணும்னு எனக்காக காலையிலேயே வந்து எப்ப போலாம் எப்போ போலாம்னு கேட்கும் போது, இந்த படம் வெற்றி பெறணும்னு இந்த டீம் மொத்தமா சேர்ந்து உழைப்பது தெரியுது.. இவர்களைப் பார்க்கும்போது எனக்கு சென்னை 28 டீம் எப்படியோ அப்படித்தான் எனக்கு தெரிய வருது. ட்ரீம் வாரியர் ஒரு எக்ஸலண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் அவர்களிடம் உங்கள் படம் இருப்பது ஒரு நம்பிக்கையான வெற்றியை கொடுக்கும்..
கதாநாயகி ஜனனி அவர்கள் பேசியது : ஹீரோயின் அவர்கள் எங்க தொடங்குறதுனு தெரியல எல்லாருக்கும் வணக்கம்... டைரக்டர் சார் என்ன கதையை சொன்னாரோ அந்த அளவிற்கு அழகா படமா எடுத்து இருக்காரு ரொம்ப நல்லா வந்திருக்கு உசுரே படம்... ஆகஸ்ட் 1 தியேட்டர்ல ரிலீஸ் ஆகிறது... உசுரே படக் குழுவினருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த படத்தை பார்த்து எங்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க நன்றி வணக்கம்.
டீஜே அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம்.. அசுரனுக்குப் பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.. ஆரம்பித்த நாட்களை நினைத்து பார்க்கையில் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு என்னை இந்த அளவுக்கு அழைத்து வந்தது இசை தான். சிறு வயது முதல் இருந்தே அவ்வளவாக யாரிடமும் பேசியது இல்லை இசையிடம் மட்டுமே பேசி வந்தேன்..என் உணர்வுகளை பாடல் வரிகள் மூலம் பாடி தயாரித்தும் வந்தேன் எனது 16 வயதினில்... முட்டு முட்டு பாடல் மூலமாக உலகத்திற்கு அறிமுகமானேன். எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாத ஒரு ஈழத் தமிழ் குடும்பத்திலிருந்து வந்த நான் டிஜே அருணாச்சலம்.. என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த என் குரு வெற்றிமாறன் அவர்களுக்கு என் முதல் வணக்கமும் நன்றியும்... ஒரு வேல் முருகனா இந்த உலகத்துக்கு ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தியதற்கு வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி.. அசுரன் என்ற ஒரு படத்தினால் எனக்கு நிறைய சந்தோஷமும், என் வாழ்க்கையும் மாறியது.. அந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்ன அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி... என்மேல் நம்பிக்கை வைத்த அந்த இயக்குனரில் ஒருவரான நவீனுக்கு நன்றி.. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்... அசுரன் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை ஆன ரோல் இந்த படத்துல எனக்கு.. நான் சிம்புவின் ரசிகன்.. இப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிம்பு நடித்த கோவில் படம் தான் நினைவிற்கு வந்தது.. சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் இப்படத்தில் நடித்தேன்.. அருமையான கதையை கொடுத்த நவீனுக்கு நன்றி அடுத்தடுத்து நீங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிக படங்களை இயக்க வேண்டும்.. 22 நாட்களில் முடித்த படம் அழகாக வந்திருக்கு... ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் தயாரிப்பாளர் மவுலி அவர்களுக்கு நன்றி...
இறுதியாக இயக்குனர் நவீன் மற்றும் தயாரிப்பாளர் மௌலி எம் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி இனிதே முடிந்தது..
ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளது.
இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் “பனி” திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு பான்-இந்தியப் படமாக உருவாகும் இப்படம் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், பூஜை நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் சார்பில் வினாயகா அஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதியுள்ள சஃபர் சனல் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை ஜோஜு ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, மற்றும் சஃபர் சனல் இணைந்து எழுதியுள்ளனர்.
'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , 'ஃபைவ் ஸ்டார் ' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.
'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்... அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்..படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.
கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.
Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.
மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!
குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’. பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப்பட்ட மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், 'கௌர்நாயுடு' எனும் வீரமிகுந்த கதாபாத்திரத்தில் அவர் மிரட்டும் வகையில், ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், ஆஸ்கார் விருது பெற்ற மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.
ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக , மார்ச் 27, 2026 அன்று "பெத்தி" படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக், வித்தியாசமான ராம்சரண் லுக், சிவராஜ்குமார் லுக் என, "பெத்தி" படம் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ).
பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர்.
படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத் திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது…
எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும். டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய் தத் சாருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும், நான் தர்ஷனுடன் ஜோகையா செய்யும் போதிலிருந்து சென்னையில் தான் டப்பிங், சிஜி எல்லாம் செய்து வருகிறோம். துருவ் சர்ஜா இப்படத்தில் கலக்கியிருக்கிறார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்து கொண்டதாவது…
சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன், ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படம் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் பிடிக்கும். கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம், துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார், அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகை ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டதாவது…
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள், நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம். எல்லோரும் பாருங்கள் நன்றி.
நடிகை ரீஷ்மா பகிர்ந்து கொண்டதாவது..
எங்களின் கேடி பட டீசரை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இது வெறும் டீசர் தான் படத்தில் இன்னும் பல ஆச்சரியம் இருக்கிறது. சஞ்சய் தத் சார், துருவ் சார், ஷில்பா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். துருவ் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிறைய டிப்ஸ் தந்தார். இப்படத்தை நீங்கள் பார்த்துப் பாராட்டுவதைக் கேட்க ஆவலுடன் உள்ளேன்.
நடிகர் துருவ் சர்ஜா பகிர்ந்துகொண்டதாவது…
எல்லோருக்கும் வணக்கம், இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார். இது நல்ல மாஸ் மசாலா படம் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சுப்ரீத் பகிர்ந்துகொண்டதாவது…
மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை எங்களிடம் கொண்டுவந்த பிரேம் சாருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நட்சத்திரங்களுக்கு நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
ஆக்ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ரீஷ்மா நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும் வகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
KVN Productions வெங்கட் கே.நாராயணா வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!
இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில் உலகெங்கிலும் "பறந்து போ" திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்.
இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!
'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' MCU உலகில் சில்வர் சர்ஃபர் மற்றும் கேலக்டஸுடன் மீண்டும் நுழையவிருக்கும் நிலையில், தமிழ்- தெலுங்கு என தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை பார்க்கலாம்.
மிஸ்டர் ஃபெண்டாஸ்டி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா (ரீட் ரிச்சர்ட்ஸ்):
கூர்மையான, பல அடுக்குகளுடன் உணர்வுப்பூர்வமான இந்த வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யா மிகப்பொருத்தமானவர். இந்த கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜ் இன்னும் ஆழமான மற்றும் கிரே ஷேட்ஸ் கொடுப்பார்.
இன்விசிபிள் வுமன் கதாபாத்திரத்தில் நயன்தாரா (சூசன் ஸ்டோர்ம்):
நிதானமான, கட்டளையிடும் மற்றும் வலுவான நயன்தாரா, அமைதியாக உறுதியுடனும் கட்டுப்பாடுடனும் அணியை வழிநடத்த முடியும்.
ஹியூமன் டார்ச் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா (ஜானி ஸ்டோர்ம்):
பொறுப்பற்ற, வசீகரமான, வீரம் மிக்க விஜய் -ஜானி ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போவார்.
தி திங் கதாபாத்திரத்தில் ஆர். மாதவன் (பென் கிரிம்):
பென் கிரிம் கதாபாத்திரம் பரிதாபம், வலிமை மற்றும் வலி இவற்றை கொண்டது. இவை மூன்றையும் மாதவன் தனது நடிப்பில் கொண்டு வர முடியும். அழகான அதே சமயம் சோகமான பின்னணியும் அவரது கதாபாத்திரத்திற்கு இருக்கும்.
கேலக்டஸ் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்:
கேலக்டஸ் வில்லன் மட்டுமல்ல! அவரது இருப்பு கடவுளை போன்றது. பிரபஞ்சத்தின் அச்சுறுத்தலையும் ஆழத்தையும் கோபத்தையும் கடத்த பிரகாஷ்ராஜ் தான் சரியான தேர்வு.
சில்வர் சர்ஃபர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி:
தெய்வீக தன்மையையும், ஆழமான உணர்வையும் சில்வர் சர்ஃபர் கதாபாத்திரத்தில் கொண்டு வர நடிகை சாய்பல்லவி சரியான தேர்வாக இருப்பார். சில்வர் சர்ஃபரை ஒரு வீழ்ந்த தேவதையாக, அழகான, குற்ற உணர்ச்சி கொண்ட, புரிந்துகொள்ள முடியாத சக்திவாய்ந்தவராக சாய்பல்லவி திரையில் கொண்டு வருவார்.
வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.
சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பில், D54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா