சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

பம்பரகண்ணாலே ஆர்த்தி அகர்வால் மரணம்
Updated on : 07 June 2015

2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான ஆர்த்தி அகர்வால் வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தபின்பு பிரபலமானார். அதன்பிறகு தமிழில்  பம்பரகண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 


ஆர்த்தி அகர்வாலும் தெலுங்கு நடிகர் தருணும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆர்த்தியை தருண் கைவிட்டதால் ஆர்த்தி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் .


அதன் பிறகு இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்தது. பிறகு அமெரிக்கா சென்றுவிட்டார்.  


6 மாதங்களுக்கு முன் கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து ஹைதராபாத் வந்துவிட்டார்.  இந்நிலையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 


ஹைதராபாத் வந்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன.  


இந்த சூழ்நிலையில் ஆஸ்துமா கோளாரினால் அவதிப்பட்டுவந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்று தகவல் ஒரு பக்கம் இருக்க,  இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள். இவரின் மரணம் தெலுங்கு திரையுலகை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


 


 


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா