சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!
Updated on : 30 March 2026

தமிழ் மற்றும் மலையாள OTT பார்வையாளர்களுக்காக ZEE5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.



 



தயாரிப்பு கட்டத்தில் ‘Once Upon a Time in Kayamkulam’ என்ற பெயரில் உருவான இந்த தொடர், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய தலைப்பில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த தலைப்பு, சீரிஸின் விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை அழகாக பிரதிபலிக்கிறது.



 



இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். நடிகர்கள் வரிசையில் முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



கதை, அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச்சம்பவத்துடன் தொடங்குகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், அதற்குள் நுழைவதே இந்த மர்மத்தின் மையமாகிறது.



 



புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடுகின்றனர். ஆனால், மர்மமான திருடன் அவர்களை விட பல அடிகள் முன்னிலையில் இருந்து, தானே உருவாக்கிய குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். இதற்கிடையில், சாதாரண ஊர்மக்கள், தங்களை டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், மற்றும் தெரியாமலே இந்த வழக்கில் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — அனைவரும் சேர்ந்து இந்த கதையை இன்னும் வினோதமாக மாற்றுகின்றனர்.



 



இதனால், ஒரு சாதாரண விசாரணை வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. ஒவ்வொரு சம்பவமும் புதிய மர்மத்தை வெளிப்படுத்தும் இந்த உலகத்தில், எதுவும் எளிதாக இல்லை என்பதே ‘காக்கி சர்கஸ்’ சீரிஸின் முக்கிய சுவாரஸ்யம்.



 



இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,



“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின்  இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.



 



நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,



“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும்   மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.



 



பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்கள், பரபரப்பு மற்றும் வித்தியாசமான நகைச்சுவை கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, வரும் ஏப்ரல் 10 முதல் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா