சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு
Updated on : 16 June 2015

விஜய்யின் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வண்ணமாக விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி விஜய் நடித்துள்ள புலி படத்தின்  பர்ஸ்ட் லுக் மற்றும் 40 வினாடி டீஸர் ஆகியவை வெளிவரும் என அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளன.



தற்சமயம் விஜய் தனது குடும்பத்துடன் லண்டனில் ஓய்வு எடுக்க சென்றுள்ளார். வருடாவருடம் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடும் விஜய் இந்த வருடம் லண்டனில் இருப்பதால் ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இல்லை இருந்தாலும் விஜய் பிறந்தநாளன்று அவர் நடித்து வெளிவரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 40 வினாடி டீஸர் ஆகியவை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக பிறந்தநாள் பரிசாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 



இந்நிலையில் 'புலி' படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் புலி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெறும் என்றும் லண்டனில் இருந்து விஜய் சென்னை வரும் தேதியை வைத்து இசை வெளியீட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா ஸ்வேதா, சத்யன், கருணாஸ், இமான் அண்ணாச்சி, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவ இயக்கியுள்ளார். கவியரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். பி.டி.செல்வகுமார் மிகுந்த பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.  இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா