சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

சினிமா செய்திகள்

புலி படத்தின் டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்டவர் கைது
Updated on : 21 June 2015

இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் புலி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் இளையதளபதியின் பிறந்தநாளான ஜூன் 22ந் தேதி புலி படத்தின் அட்டகாசமான டீசரை வெளியிட முடிவெடுத்தார்கள் இது இளையதளபதி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியது.



இன்று ஜூன் 21 மதியம் 12 மணியளவில் யுடியூப் வழியாக புலி படத்தின் டீசரை திருட்டுதனமாக வெளியாகியது, இதனால் புலி படக்குழுவும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சட்டவிரோத செயலை செய்த மர்ம நபர் யார், டீசர் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று விசாரித்ததில் சென்னை வள்ளுவர்கோட்டம் 4Frames Editing Studioல் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் வீடியோவை வெளியிட்ட நபரை பிடித்து கைது செய்துள்ளார்கள்.



இதுகுறித்து  4 Frames உரிமையாளர் இயக்குநர் ப்ரியதர்ஷன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, எனது நிறுவனத்தில் இண்டன்ஷிப்பில் பணிபுரிய வந்த எம்.எஸ்.மிதுன் என்பவர் இந்த சட்டவிரோத செயலை செய்திருப்பது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



4 Frames மேனஜர் கல்யாணம் பேசியதாவது, இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவிருந்த புலி படத்தின் டீசர் சட்டவிரோதமாக வெளியானது தெரிந்தது உடனே அலுவலகத்திற்கு விரைந்து வந்து இச்செயலை செய்த மிதுன் என்பவரை கைது செய்துள்ளோம். இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறினார்.



தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது, இளையதளபதி விஜய் மற்று இயக்குநர் சிம்புதேவன் இணைந்து பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் புலி படத்தின் டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் எங்களது ஒட்டுமொத்த குழுவும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் புலி படத்தை இப்படி யாரோ ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வெளியிடுவது கடுமையாக தண்டிக்கதக்கது. இப்படி ஒரு டீசர் வெளியானதால் எங்களுக்கு பெரிய பயம் எழுந்துள்ளது. பின்னாளில் படம் இப்படி வெளியானால் எங்கள் நிலைமை என்ன ஆகும்  ஏற்கனவே ஐ, பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை குறிவைத்து இந்த மாதிரி செயல்கள்  தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. இந்த மாதிரி செயல்களை எப்படியாவது எதிர்காலங்களில் தடுக்க வேண்டும் என்று கூறினார்.



இப்பிரச்சனையை கேள்விப்பட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேசன் உடனே சம்பவ இடத்திற்கு வந்து புலி பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நின்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா