சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

ஒரே நாளில் மூன்று சரவெடிகள்
Updated on : 11 July 2015

கடந்த வருடம் தீபாவளியன்று விஜய் நடித்த கத்தி படமும் விஷால் நடித்த பூஜை படமும் வெற்றி பெற்று அமோக வசூலை குவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.



 



அதேபோல் இந்த வருடமும் விஜய் நடிக்கும் புலி படமும் விஷால் நடிக்கும் பாயும்புலி படமும் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரீலீஸ் ஆவது மட்டுமின்றி இந்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாவும் ஒரே நாளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி இந்த இரு படங்களின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என ரசிகர்களை கேட்கும் வண்ணமாக இதனுடன் சேர்ந்து அதே தேதியில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. எனவே மூன்று முக்கிய நடிகர்களின் முக்கிய தினமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 



 ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமான தயாரிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கு டைட்டில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியா,சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. அதற்குண்டான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா