சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

விஜயகாந்த் கலக்கம், நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதி
Updated on : 11 July 2015

விஜயகாந்தும், இப்ராஹிம் ராவுத்தரும் உயிர் தோழர்கள் என்பது சினிமாவுலகம் மட்டுமின்றி அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. சிறுவயது முதல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரையில் இருந்து சென்னை வந்து ஒன்றாக போராடி அதுவும் தனது நண்பர் விஜயகாந்த்தை ஹீரோவாக்கி அழகு பார்த்தவர்  ராவுத்தர். இப்ராகிம் ராவுத்தர் படம் என்றாலே விஜயகாந்த்தான் ஹீரோ என்று எதிர்பார்க்கும் அளவுக்கு இருவரும் இணைபிரியாத நண்பர்கள்.



 





பெரிய ஹீரோவாக வளர்ந்த பின்பும் கூட அவருக்கு நிழலாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர்தான். விஜயகாந்தின் திருமணம் வரைக்கும் ஒன்றாகவே இருந்த இருவரும் அதற்கப்புறம் அந்த நட்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் அரசியல்.



 





தற்போது ராவுத்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . நண்பர் மருத்துவமனையில் இருக்கும் செய்தி கேட்ட விஜயகாந்த் மருத்துவமனைக்கு விரைந்து  சென்றிருக்கிறார். அங்கு அவர் சுயநினைவில்லாமல் இருப்பது கண்டு அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்திருக்கிறார்.  



 





அங்கு அவரது நிலைமை கண்டு மனம் வருந்தி விஜயகாந்த் அவரது நண்பருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் 



 





நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா



 



அன்புடன் உன் நண்பன்

விஜயகாந்த்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா