சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

குத்து சிம்புவுக்கா ரசிகர்களுக்கா!
Updated on : 03 September 2015

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்துக்கு குறளரசன் இசையமைத்து இருக்கிறார் ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.



 



இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. வாலு படம் பிரச்சினைகள் முடிந்து படம் திரைக்கு வந்த பின்னர்  ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல் படமாக்கப்பட்டு படத்தை வெளியிட திட்டமிட்டபடி நயன்தாராவிடம் தேதிகள் கேட்டு தரவில்லை என்பதால் டி.ஆர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.



 



இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, நயன்தாரா மீது புகார் எதுவும் நாங்கள் புகார் நாங்கள் தரவில்லை.  ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கபடவேண்டி இருந்ததால் நயன்தாராவின் கால்ஷீட் கேட்க யாரை அணுகுவது என்று தெரியவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கத்திடம் “நீங்கள் நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். அவருக்கு கொடுக்கவேண்டிய மீத சம்பளத்தை உங்களிடமே கொடுத்துவிடுகிறோம் நீங்களே நயன்தாரவிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினோம் அதற்க்கு அவர்கள் இதை நீங்கள் ஒரு  கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள், எழுதி கொடுத்தோம். இது தான் நடந்தது.



 



நயன்தாரா கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும் அந்த பாடல்கள் இல்லாமல் படம் வெளியாகும். ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்தின் பாடல்களே தீர்மானிக்கிறது. மக்களுக்கு படத்தை மிக விரைவில் கொண்டு சேர்ப்பதே படத்தின் பாடல்கள் தான் எனவும் சிம்பு கூறினார்.



 



ஆனால் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இந்த பாடல்கள் படத்திற்கு தேவையற்றவை சிம்புவும் TRரும் தங்கள் படம் என்றாலே குத்து பாட்டு இருந்தா தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்கள் ரசிக்கவா அல்லது ரசிகர்கள் ரசிக்கவா என்று தெரியவில்லை. மேலும் நயன்தாராவின் கால்ஷீட் யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லை அதுனாலதான் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினோம் என்று சிம்பு கூறுவது மிகவும் கோமாளித்தனமாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா