சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட அழைக்கிறார் ராகவா லாரன்ஸ்
Updated on : 13 February 2017

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடுவதற்காக உலக தமிழர்கள் அனைவரும் வரும் 18-ஆம் தேதி அவர்கள் இருக்கும் இடத்திலேயே கூடுங்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.



 



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:



 



"நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோஷத்தை வெற்றிவிழாவாக மாணவர்கள்,இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசைதான்.



 



அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.



 



பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40 பேராக குறைத்துக்கொண்டு அலங்காநல்லூர் சென்றோம். அலங்காநல்லூரில் இடப்பற்றாக்குறைக் காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஊர்மக்கள் மீது எந்த தவறும் இல்லை. ஊர்மக்களின் அளவுகடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.



 



இம்மாபெரும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை காணமுடியவில்லை என்று பல மாணவர்களும் இளைஞர்களும் வருத்தப்பட்டார்கள். கண் கலங்கியும் விட்டார்கள். அதனால் நானும் அவர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்றுவிட்டேன்.



 



மாணவர்களும் ,இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களது வருத்ததைப் போக்க ஜல்லிக்கட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18-ம் தேதி அன்று வெற்றியை கொண்டாடலாம் என்று கூறினேன் அவர்களும் சம்மதித்தனர். அப்போது அவர்கள் முகம் மெரினாவில் எழுந்த அலைபேசியின் வெளிச்சத்தைபோல் ஒளிர்ந்தது.



 



அதனால் இத்திருநாளை வெற்றி விழாவாக எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம் என நாம் முடிவெடுப்போம். நமது சந்தோஷக் களம் மெரினாதான் என்றாலும் இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதாலும் மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி ஏதாவது ஒரு இடத்தில் ஒன்றுகூடி கொண்டாட உள்ளோம். மற்ற அனைவரையும் இணைப்பது என்பது சிரமம் என்பதால் உலகத்தமிழர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே கொண்டாடுங்கள்.



 



கூலித்தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் என ஜல்லிகட்டுக்காக குரலெழுப்பிய அனைவரும் இதை வெற்றியாக கொண்டாடுவோம்.



 



வரும் பிப்ரவரி 18-ம் நாள் மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ,உங்கள் அலைபேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.



 



மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் வரும் பிப்ரவரி 18-ம் நாள் அன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் பிப்ரவரி 18 மாலை 7 மணி கொண்டாட்டதை மறவாதீர்கள்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா