சற்று முன்

மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!
Updated on : 19 October 2025

தமிழ் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு  அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் தீபாவளி மலர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா, அக்டோபர் 18 ஆம் தேதி மாலை சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் மக்கள் குரல் ராம்ஜி, அனுபமா, தர்ட் ஐ பிரகாஷ் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜன், நடிகர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



 



நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக், பொருளாளர் ஏ.மரிய சேவியர் ஆகியோரது  தலைமையின் கீழ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசியதோடு, தமிழ் சினிமாவின் மூத்த நிருபர்களால் தொடங்கப்பட்ட சங்கத்திற்கு புதிய இரத்தத்தை பாய்ச்சி, புத்துயிர் வழங்கி திறம்பட செயல்பட்டு வரும் நிர்வாகிகளையும் பாராட்டினார்கள்.



 



மேலும், அக்காலத்தில் சுமார் 15- க்கும் மேற்பட்ட நிருபர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஊடகத்துறையின் அதீத வளர்ச்சியால் இன்று நிரர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களின் முழுமையான பின்னணியை ஒருவருக்கொருவர் அறியாத சூழல் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றி, ஒவ்வொரு நிருபர்களின் பின்னணியை சேகரித்து, அதைபாவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மூத்த நிருபர் மக்கள் குரல் ராம்ஜி முன் வைத்தார்.



 



பட்டாசு, புத்தாடை, இனிப்பு, முறுக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி சினிமா பத்திரிகையாளர்கள் இல்லத்தில் ஒவ்வொரு தீபாவளியன்றும் மகிழ்ச்சி என்ற தீபத்தை ஏற்றும் சினிமா பத்திகையாளர் சங்கத்தின் இத்தகைய சிறந்த பணி மேலும் சிறக்க வேண்டும், என்று திரை பிரபலங்கள் வாழ்த்தினார்கள்.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா