சற்று முன்

இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |   

சினிமா செய்திகள்

பாவனா சம்பவத்தை தொடர்ந்து நடிகர் சங்கம் புதிய வேண்டுகோள்!
Updated on : 22 February 2017

பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஒரு நடிகை என்று மட்டும் பார்க்காமல் பெண் இனத்திற்கான ஒரு கொடுமையாகவே கருதுகிறோம் என்று கூறியுள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், பெண்களுக்கு சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்த திரை கலைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.



 



"சமீப காலங்களில் பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் கிராமம், நகரம் மற்றும் படித்தவர்கள், படிக்காதவர்கள் பேதமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடந்தேறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.



 



இதுபற்றிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வெளிப்படுத்தி போராடி வருகின்றன. அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர அரசுக்கும் காவல்துறைக்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்தும் வருகின்றன.



 



இந்நேரத்தில் அனைத்து திரைத்துறை கலைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம்! உங்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்...... அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி பல நலத்திட்டங்களை செய்தும் வருகிறீர்கள். அத்துடன் பெண்களுக்கு சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் முன்னுரிமை கொடுத்து சமூக செயலாற்ற உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!



 



சமீபத்தில் செல்வி.பாவனா அவர்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஒரு நடிகை என்று மட்டும் பார்க்காமல் பெண் இனத்திற்கான ஒரு கொடுமையாகவே கருதுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் உறுப்பினர் திரைக்கலைஞர் சகோதரி வரலட்சுமி அவர்கள் இதுபோன்று தனக்கேற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை மனகசப்புடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இதை சட்டப்படியும் தார்மீகரீதியாகவும் அவர்களுடன் இணைந்து குரல் கொடுக்க நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.



 



திரைத்துறையில் இயங்கி வரும் பெண்கள், நாடக துறையில் உள்ள பெண்கள், தொழில் பாதுகாப்பையும், உளவியல் ரீதியான பாதுகாப்பையும் காப்பாற்ற தனிப்பட்ட கவனம் செலுத்த தனிக்குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரை நியமிப்பதை குறித்து வருகின்ற செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.



 



இதுபோன்ற சமூக விழிப்புணர்வுகளுக்கு போராடும் ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்திற்கும் எப்போதுமே எங்களுடைய ஆதாரவுகள் உண்டு. அவர்களுடன் சமூக மாற்றத்திற்கு இணைந்து செயல்பட நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று  தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா