சற்று முன்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |   

சினிமா செய்திகள்

யுவன் ஷங்கர் ராஜா இசையின் 20 ஆண்டுகள்!
Updated on : 28 February 2017

இசைஞானியின் மகன் என்ற அடையாளத்தோடு திரைத்துறையில் தனது இசை வாழ்க்கையை தொடங்கிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது தனித்த திறமையால் இத்துறையில் வெற்றிகரமாக இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.



 



சரத்குமார் நாயகனாக நடித்த 'அரவிந்தன்' படத்தில் துவங்கிய யுவனின் இசை பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. இதற்கு முழு காரணமாக இருப்பது இளம் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் அவரது இசை தான்.



'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தின் மூலம் பாடல்களின் பெரிய வெற்றியை சுவைத்த யுவன், அடுத்தடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன், பாலா போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து கவனம் பெற்றார். 'நந்தா' திரைப்படத்தில் யுவனின் பின்னணி இசை அனைவராலும் பாராட்டப்பட்டது.



 



தொடர்ந்து செல்வராகவன், வசந்த், அமீர், விஷ்ணுவர்தன், ராம் போன்ற இயக்குனர்களின் படங்களில் யுவனின் இசை மாயாஜாலங்களை நிகழ்த்தியது. இவர்களின் படங்களில் இடம்பெற்ற யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் இந்திய சினிமாக்களின் இசை பிரிவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தன.



 



இனிவரும் காலங்களிலும் யுவனின் இசை தமிழ் சினிமா மட்டுமின்றி, சர்வதேச எல்லைகளிலும் அடையாளம் பெரும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. இடையில் ஒருசில ஆண்டுகள் சிறிய சறுக்கல்களை அவர் சந்தித்தாலும் 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'தரமணி', 'யாக்கை' பட பாடல்கள் மூலம் மீண்டும் தனது புதிய அத்தியாயத்தை துவங்கிவிட்டார் யுவன் ஷங்கர் ராஜா. இசையில் அவர் மேலும் பல சாதனைகளை படைக்க தமிழ் சகாவின் வாழ்த்துகள்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா