சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ரஜினி மலேசியா மற்றும் தைவான் நடிகருடன் மோதல்
Updated on : 06 January 2016

ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் 'கபாலி', பா ரஞ்சித் இயக்கத்தில் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. 



இதன் படபிடிப்பு காட்சிகள் மலேசியாவில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் படபிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படபிடிப்பு நடத்த இக்குழுவினர் சென்னை ஈசிஆறில் உள்ள ஒரு தனியார் இடத்தில் கூடியுள்ளனர். 



மலேசியாவில் எடுக்கப்பட்ட பகுதியில் கபாலி படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க சீன நடிகரான ஜெட்லீயை முதலில் அணுகியிருக்கின்றனர். அவர் கால்சீட் பிரச்சினை என காரணம் கூறி தவிர்த்திருக்கிறார்.



ஆகவே 'கபாலி' படத்தில் ஜெட்லீக்கு பதிலாக தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவ்-ஐ நடிக்க வைத்துள்ளனர். இவர் '1911' என்ற சைனீஸ் படத்தில் ஜாக்கி ஜானுடன் இணைந்து நடித்தவர். இவருடன் சேர்ந்து மலேசியன் நடிகரான ரோஷ்யம் நார் என்பவரும் சேர்ந்து 'கபாலி' படத்தில் வில்லனாக ரஜினியுடன் மோதுகிறார்கள். இவர்கள் மூவரும் மோதும் காட்சிகள் சில தினங்களில் ஈசிஆறில் நடைபெறயிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா