சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும்!
Updated on : 25 May 2017

கவிஞர் நா.காமராசன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து, நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



 



''ஒரு தீவிரமான புதுக்கவிஞனுக்குத் திரைப்பாட்டு எழுத வராது என்ற பழைய நம்பிக்கையை உடைத்தவர் நா.காமராசன். இவர் திராவிடப் பண்ணையில் முளைத்தவர். இந்தி எதிர்ப்பு போர்க்களத்தில் தன்னை அடையாளப்படுத்தியவர். மதுரையில் காளிமுத்துவோடு சட்டத்தை எரித்துச் சிறை சென்றவர். 'சூரிய காந்தி' என்ற மரபுக்கவிதையில் தொடங்கிய அவரது எழுத்துப் பயணம் 'கருப்பு மலர்கள்' என்ற புரட்சிக் கவிதையில் சென்று முடிந்தது.



 



'போய்வா நதி அலையே - ஏழை



 



பூமிக்கு நீர் கொண்டுவா'



 



என்ற அவரது பாட்டு காதலிலும்கூட ஏழைகளையே கனவு கண்டது.



 



'நிர்வாணத்தை விற்கிறோம்



 



ஆடை வாங்குவதற்காக'



 



என்று பால்வினையாளிகளைப் பற்றி எழுதிய கவிஞன்



 



'வால் முளைத்த மண்ணே' - என்று புல்லைப் பற்றி எழுதிய கவிஞன்...



 



'புயலை'க் கடலின் வேட்டை நாய் என்று எழுதிய கவிஞன்...



 



'இனிமேல் இங்கு நேசிப்பதற்கு என்ன இருக்கிறது



 



ஆஸ்துமா மாத்திரைகளைத் தவிர'



 



என்ற கவிதை வரியோடு தன் காலத்தை முடித்துக்கொண்டார்.



 



நா.காமராசனின் கவிதைகளை கருணாநிதி வாழ்த்தினார்; அவருடைய பாடல்களை எம்.ஜி.ஆர் ஆதரித்தார். இப்படி இருபெரும் ஆளுமைகளாலும் வளர்க்கப்பட்டவர் இன்று எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.



 



இந்த உடம்பு அழியப் பிறந்தது. அழியும் உடம்பிலிருந்து அழியாததைச் செய்கிறவனே மரணத்தை வெற்றி கொள்கிறான். அவர் கவிதைகள் அழியாதவை. நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும்.



 



அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் இலக்கிய உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கல்'' என வைரமுத்து கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா