சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

நடிகர் சாமிக்கண்ணு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
Updated on : 05 June 2017

மூத்த தமிழ் சினிமா நடிகர் சாமிக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) காலமானார். மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரம் கவனிக்கத்தக்கவையாகும்.



 



இந்நிலையில், சாமிக்கண்ணு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 



 



"தமிழ் சினிமாவிலன்  ஜாம்பவான்களான எம். ஜி.ஆர், சிவாஜி, ரஜனி,கமல் முதல் இன்றைய   தலைமுறை நடிகர்களின் படங்களிலும் குணசித்திர நடிகராக பணியாற்றிய 400 க்கு மேல் படங்களில் நடித்துள்ளார்.



 



தலைமுறைகள் கண்ட , தனது நடிப்பாற்றலால் ரசிக உள்ளங்களில் சிரஞ்சீவியாக வாழும் மூத்த  கலைஞரான சாமிக்கண்ணு அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கத்தில் ஆரம்பகாலத்திலிருந்து உறுப்பினராக உள்ளார். தனது எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி



 



1954-ல் புதுயுகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். கே.எஸ். கோபாலகிருஷ்ணண், எஸ்.பி.முத்துராமன், மாதவன், மகேந்திரன், இராமநாராயணன், ராஜசேகர், ராஜ்கிரண் மற்றும் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். பட்டிக்காடா பட்டணமா, பாட்டும் பரதமும், நான், அன்னக்கிளி, உரிமைக்குரல், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, உதிரிப்பூக்கள், சகலகலாவல்லவன், வண்டிசக்கரம், என் ராசாவின் மனசிலே, மகாபிரபு போன்ற படங்களில் இவர்  ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் ரசிகர்கள் மனதை கவர்ந்து நிலைத்து நிற்ப்பவையாகும்.



 



அன்னாரது மறைவு நாடக-திரைப்பட நடிகர் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்" என நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா