சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களின் மூலம் அரசியல் பணியை தொடங்கிய ரஜினிகாந்த்!
Updated on : 13 June 2017

 





 



ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பரபரப்பை 'காலா' திரைப்படம் சற்று மறக்க செய்துள்ளது. இந்நிலையில், மீண்டும் அவரின் அரசியல் நுழைவு குறித்து பேச வைக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.



 



வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை, நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



 



வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி அவர்கள் இதனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும்  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



 



மாணவ மாணவியருக்கு ரஜினிகாந்த் புகைப்படம் பொறிக்கப்பட்ட விருதும் வழங்கப்பட்டது. இவை அனைத்துமே மாணவர்கள் கல்வி கற்க ஊக்கமளிப்பதாக இருந்தாலும், ரஜினிகாந்தின் சமூக பணிகள் தற்போது அரசியல் பணியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற செயல்பாடுகள் ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்கள் கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா