சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

பரபரப்பாக தொடங்குகிறது இருமுகன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!
Updated on : 10 March 2016

"பத்து எண்றதுக்குள்ள" திரைப்படத்திற்கு பிறகு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் "இருமுகன்". பெயரிடப்படாமல் துவங்கிய இந்த திரைப்படத்திற்கு, பின்னர் இருமுகன் என பெயரிடப்பட்டது. விக்ரம் இந்த திரைப்படத்தில்  இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.



விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.



தற்போது இருமுகன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே மாதம் வரை இந்த படப்பிடிப்பு நடக்கிறது.



சென்னையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் காஷ்மீரில் நடைபெற உள்ள படப்பிடிப்பிற்காக இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் அங்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களை தேர்வு செய்து வந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.



தமிழில் "அரிமா நம்பி" திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த திரைப்படம், சைன்ஸ் பிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த படமாகும். மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படத்தின் இசையும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா