சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி!
Updated on : 06 November 2017

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குழந்தைகளுடன் ஏழை பெற்றோர்கள் தீக்குளித்த சம்பவத்தை சித்தரித்து கார்ட்டூன் வரைந்ததற்காக கார்ட்டூன் பாலா கைது செய்யப்பட்டார்.



 



இந்நிலையில், கார்ட்டூனிஸ்ட் பாலா கைது குறித்தும் அவரது கார்ட்டூன் குறித்தும் நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.



 



"சமீபத்தில் நெல்லை தீக்குளிப்புகளை மையப்படுத்தி ஓவியர் பாலா வெளியிட்ட கேலிச்சித்திரம் பேரதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அதைத்தான் பாலாவும் எதிர்பார்த்திருப்பார், விரும்பியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இவரின் பல முந்தைய சித்திரங்களும், பொது நாகரிகத்தின் எல்லைகளை அறவே நிராகரிப்பவை. கூச்சநாச்சம் பார்க்காதவை. கருத்துக்களை வாழைப்பழ ஊசி போலோ, இல்லை ஆழம்பொதிந்த நையாண்டியாகவோ சொல்வது ஒரு வகை என்றால், பொளேரென்று முகத்தில் அறைந்தாற் போல் உரைப்பது இன்னொரு வகை. இதில் எங்கே எல்லை மீறப்படுகிறது, அப்படி மீறப்படும் எல்லைதான் எது என்பதெல்லாம் விவாதத்துக்குரிய விஷயம்.



 



நெல்லை ஆட்சியாளர் சந்தீப் நந்தூரி மனநிலை புரிகிறது. அரசியல்வாதிகளுக்கு விமர்சனங்களும், எதிர்ப்பும் பழக்கம். அதிகாரிகள் பொதுவாக ஊடக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதில்லை. பாவம், ஏற்கனவே நான்கு உயிர்கள் கண் முன்னே துடிதுடித்து இறந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்னரே, மிக மோசமான மானக்கேட்டையும் சந்திக்கும் சூழல். ஆட்சியாளர் சந்தீப் ஒரு நல்லவர், பொறுப்புள்ள அதிகாரி என்பது உண்மையானால், வீண் பழி சுமத்தப்படும் போது, அதிலும் மிக ஆபாசமாக அது சித்தரிக்கபடும்போது, பதறித்தான் போயிருப்பார். அவர் போலீஸை நாடியதில் ஆச்சரியமில்லைதான். ஆனால், அது அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றே நான் பார்க்கிறேன்.



 



இப்படி உங்களுக்கு நடந்தால் சும்மா இருப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல எனக்கு முழு தகுதியும் மனப்பக்குவமும் உண்டென்று நினைக்கிறேன்.



 



நடிகைகளை ஆபாசமாக போட்டோஷாப் செய்து வெளியிடும் எத்தனையோ இணையதளங்கள் உண்டு. இவை சிலரால் மட்டுமே பார்க்கப்படுகிற விளிம்பு நிலை ஊடகங்கள், கோர்ட் கேஸ் என்று போனால் அதுவரை சிலர் மட்டுமே பார்த்த கேவலமான தவறான சித்தரிப்புகள் பொதுவெளிக்கு வரும்.



 



அரெஸ்ட் ஆகும் வரை, பாலா என்பவரையும் அவரின் அந்தக் கார்டூனையும் சொற்பமானவர்களுக்கே தெரியும். இப்பொழுதோ, நாடு முழுவதும் வைரல் ஆகிவிட்டார். தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை தானே விளம்பரப்படுத்திவிட்டார். கலெக்டர் நந்தூரி, போதாததற்கு இன்னும் இருவரையும் சேர்த்து செய்தியாக்கிவிட்டார்.



 



அவதூறு கிளப்புபவர்களை எதிர்கொள்வது எப்படியென்று என்னைக் கேளுங்கள். ஒரு நடிகையாக நான் சந்திக்காத வதந்தியா, அவதூறா? சொல்லப்பட்ட பழி பொய்யென்று நிரூபியுங்கள், பழித்தவரை பழி வாங்காதீர்கள். விமர்சனங்களுக்கு எதிர்வினையாக விளக்கங்களை, விவரங்களை எடுத்து வையுங்கள்; விமர்சித்தவருக்கு விளம்பரம் தேடித் தராதீர்கள். மாண்ட உயிர்களுக்கு பதில் சொல்வதை விடுத்து, மானம் போச்சே என்று மலைக்காதீர்கள். உங்களை குறிவைத்த அந்த சித்திரம் ஆபாசமான, விகாரமான, கீழ்த்தரமான ஒன்று தான். அதில் மாற்று கருத்தில்லை. அதில் கூறப்பட்ட கருத்து பொய்யாகவும், உங்களை காயப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டதாகவும் கூட இருக்கலாம். அதற்காக சமூகம் அந்த ஓவியனை தூற்றத் தயாராக இருந்தது.



 



அவசரப்பட்டு அடக்குமுறையை அவிழ்த்துவிட்டதால் உங்கள்பால் வந்திருக்கக்கூடிய பச்சாதாபம் திசைமாறிவிட்டதே என்று ஆதங்கப்படுவதைத் தவிர இப்போது வேறு எதுவும் செய்வதற்கில்லை" என்று அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா