சற்று முன்
சினிமா செய்திகள்
'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!
Updated on : 23 October 2025

நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை!
ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.
வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு 'மெல்லிசை' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை 'மெல்லிசை' பேசுகிறது.
நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, புரோக்டிவ் பிரபாகர் மற்றும் கண்ணன் பாரதி.
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தற்போது தயாரித்துள்ள 'மெல்லிசை' அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ' அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'
'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார்.
"ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்," என்று சமீர் அலி கான் தெரிவித்தார்.
இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்த சமீர் அலி கான், "இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்," என்று கூறினார்.
'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் " தடை அதை உடை ".
இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
இசையமைப்பாளர் சாய் சுந்தர் பேசியதாவது..,
இது என் முதல் படம், முதல் மேடை.என்னுடைய பாடல்கள் இசை உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் தான் எல்லாப்பாடல்களையும் எழுதினார். மிக அழகாகவே எழுதியுள்ளார். என் நண்பன் சூர்ய தேவன் ஒரு பாடல் எழுதியுள்ளான். இந்த வாய்ப்பு தந்த அறிவழகன் சாருக்கு நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகர் குணா பாபு பேசியதாவது…,
எங்களுடைய டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். சின்ன டீம் எல்லோரும் சேர்ந்து உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நான் நடித்த திருக்குறள் படம் யூடுயூப்பில் இருக்கிறது அனைவரும் பாருங்கள். அருள்தாஸ் அண்ணன் எங்களுக்காக வந்துள்ளார். அவருடன் நான் விக்ரம் படத்தில் வேலை பார்த்தேன். அவர் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் வேலை பார்த்தது சந்தோசம். கேடி என்கிற கருப்புதுரை பார்த்து, பாரி அண்ணன் அறிவழகன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்படித் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. திரைக்கதை படிக்கும்போது அத்தனை விவரங்கள் நுணுக்கமாக இருந்தது. மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். முயன்றே எழுவோம், விழுந்தே எழுவோம் என ஒரு வரி படத்தில் வருகிறது அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகள். எல்லோரும் திரைக்கு வந்து படம் பாருங்கள் நன்றி.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது..,
இந்த படக்குழுவில் வெகு சிலரை மட்டும் தான் தெரியும். என் கே ஆர் என் மாப்பிள்ளை, அவர் என்னுடன் தமிழ்க் குடிமகன் படத்தில் நடித்தார் அது மூலம் தான் பழக்கம். இயக்குநர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர். அவரே சம்பாதித்த பணத்தில் அவரது சொந்த ஊரில் படமெடுத்துள்ளார். வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு வாய்பு கொடுத்ததற்காக அவரை கண்டிப்பாக பாராட்டலாம். எல்லோருமே திறமையாளர்கள். ஒளிப்பதிவாளர் சிறப்பாக செய்துள்ளார். இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்துள்ளார். இந்தப்படம் மூலம் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர் பாரி நல்ல ரோல் செய்துள்ளார். எல்லா நடிகர் நடிகையர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த முயற்சி எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
திருக்குறள் படத்தின் இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் பேசியதாவது..,
இந்தப்படத்தின் பெயர் மிக முக்கியமானது. உலகளவில் பார்த்தால் எழுத்து தடை செய்யப்பட்டது, நாடகங்கள் தடை செய்யப்பட்டது, சினிமா தடை செய்யப்பட்டது. அந்தவகையில் தடை அதை உடை எனும் இப்படம் ஜெயிக்க என் வாழ்த்துக்கள். 80 களில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள் இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள். இவ்விழாவிற்கு வரக் காரணம் எங்கள் படத்தில் நடித்த குணா தான். என் படத்தில் குதிரை சவாரியில் உயிரை பணயம் வைத்து நடித்தார். அவர் அர்ப்பணிப்பு பெரிதாக இருந்தது. இந்தப்படக்குழுவினர் பெரும் உழைப்பில் இப்படத்தை எடுத்துள்ளனர். புதிய குழு ஜெயிக்க என் வாழ்த்துக்கள்.
தடை அதை உடை படத்தின் இயக்குநர் அறிவழகன் பேசியதாவது..,
இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. இந்த விழாவில் எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். அவர்கள் உழைப்பை எவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா நடிகர்களுக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். என் அப்பா ஷீட்டிங்கில் இருந்தார். விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார். எடுப்பதே கஷ்டம் என்றால் 36 மணி நேரம் நடிப்பது எவ்வளவு கஷ்டம். அவர்களுக்கு நன்றிகள். எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களுன் தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் குணா நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரும் அளவு திறமை இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாடலாசிரியருக்கு சம்பளம் தரவேண்டுமே, நம் படத்தில் யாரும் என்னை கேட்கமாட்டார்கள் என நானே பாடல்கள் எழுதிவிட்டேன். அடுத்த படத்தில் புதிய பாடலாசிரியருக்கு வாய்ப்பு தருவேன். படம் 1 மணி நேரம் 53 நிமிடம் மட்டுமே. பரபரவென போகும், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரே ஒரு விசயம் சினிமாவை வாழ விடுங்கள். சினிமா பிஸினஸ் என்றால், ஒரு மாதம் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காவிட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப்படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும், அனைவரும் பாருங்கள் நன்றி என்றார்.
1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் மிக சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படம் இது. அத்துடன் சேர்ந்து தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் சொல்லாத வகையிலும், நெற்களஞ்சிய மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையிலும் சொல்லியிருப்பதாகவும் கூறுகிறார்.
இத்திரைப்படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் இத்திரைப்படம் இரண்டு நேர்-எதிர் காலங்களில் நடப்பதாலும், நிறைய நடிகர்கள் உருவமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாலும் இரண்டரை வருடங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், "'டியூட்' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது" என்றனர்.
எடிட்டர் பரத் விக்ரமன், "உலகம் முழுவதும் 'டியூட்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. பிரதீப், மமிதா, சரத் சார், ரோகிணி மேம் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி. என்னுடைய டீமுக்கும் நன்றி!".
நடிகை ஐஸ்வர்யா வர்மா, "படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களுடைய சம்யுக்தாவாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கீர்த்தி சார். இந்த வருடம் எனக்கு நடந்த அழகான விஷயம் 'டியூட்'. 'லவ் டுடே' படத்தில் இருந்து பிரதீப்பை ரொம்பவே பிடிக்கும். எனக்கும் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு பிரதீப் தான் இன்ஸ்பிரேஷன்! 'பிரேமலு' பார்த்ததில் இருந்து மமிதாவுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறியது. என் அப்பா சரத் சாரின் மிகப்பெரிய ரசிகர். அவரது கனவை இந்தப் படத்தில் நிறைவேற்றி இருக்கிறேன். படத்திற்கு இவ்வளவு அன்பு கொடுத்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. ரொம்ப பாசிட்டிவ் வைப்போடு இருந்த 'டியூட்' செட்டை இப்போது மிஸ் செய்கிறேன். உங்களுடைய கனவை எப்போதும் கைவிடாதீர்கள்".
நடிகர் ரிது ஹரூன், "இந்தப் படத்தில் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. பிரதீப் அண்ணாவின் பொறுமை, சரத் சாரின் சீனியாரிட்டி, ரோகிணி மேமின் நடிப்பு திறமை எல்லோமே இந்தப் படத்திற்கு பலம். தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியற்றியுள்ளனர்" .
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, "படத்திற்கு வெற்றி கொடுத்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. நகைச்சுவை, எமோஷன், கதை என அனைதையும் சரியான விதத்தில் கலந்து பேசுபொருளாக்கிய இயக்குநர் கீர்த்திக்கு வாழ்துக்கள். சரத் சார் நடிப்பில் பிளாஸ்ட் செய்திருக்கிறார். பிரதீப் சார், மமிதா என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகை ரோகிணி, "ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் வெற்றி மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸை தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக மாற்றிய இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. இதுபோன்ற தைரியமான கதையை தேர்ந்தெடுத்து நடித்த பிரதீப்புக்கும் நன்றி. மமிதாவுடையது மிக கடினமான கதாபாத்திரம். அதை சவாலாக எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். சரத்குமார் சாருடைய கதாபாத்திரம் பார்க்கும்போது ரொம்ப பொறாமையாக இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை 'டியூட்' சொல்லியிருக்கிறது. நல்ல இளைஞர்கள் கையில் சினிமா இருக்கிறது என்ற திருப்தி உள்ளது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிகேத் இன்னும் பயங்கரமான கதைகள் உங்களிடம் இருப்பதாக சொன்னார். அதையும் நன்றாக கொண்டு வாங்கள்" என்றார்.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "எனக்கு முதல் வெற்றி மேடை என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷலான மேடை. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சார், நவீன் சாரின் ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்கு இணை அவர்கள்தான். அனில் சாரின் ஆதரவுக்கும் நன்றி. மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார் பிரதீப். அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில விஷயங்கள் தைரியமாக வசனமாக வைப்பதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனம், கவின் ஆணவக்கொலை சமயத்தில் ஏற்படுத்திய பாதிப்பால்தான் வைத்தோம். மமிதாவிடம் ஒரு சீன் பாதி சொல்லும்போதே உடனடியாக பிடித்துக் கொள்வார். சின்ன வயதில் இருந்தே சரத் சாரைப் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை காட்சிகளையும் விரும்பி பார்த்திருக்கிறேன். ரோகிணி மேம் இந்த அம்மா கதாபாத்திரத்தில் ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்ததெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் 'டியூட்' பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் இது. எனக்கான நல்ல அறிமுகத்தை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி".
நடிகை மமிதா பைஜூ, "இது என்னுடைய முதல் தமிழ் வெற்றி மேடை! சந்தோஷமாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், கீர்த்தி அண்ணாவுக்கு நன்றி. பிரதீப், சரத் சார், ரோகிணி மேம், ஐஸ்வர்யா, ரிது, சாய் எல்லோரும் எனக்கு பயங்கர எனர்ஜி கொடுத்தார்கள். பார்வையாளர்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி".
நடிகர் சரத்குமார், " படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் 'காஞ்சனா', 'போர் தொழில்' போன்ற படங்களில் நடித்தேன். 'டியூட்' படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக 'டியூட்' படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி".
நடிகர் பிரதீப் ரங்கநாதன், "நவீன் சார், ரவி சாருக்கு நன்றி. உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது. அங்கெல்லாம் கொண்டு சேர்த்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், காஸ்ட்யூமர் பூர்ணிமா என அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா, ரிது, ரோகிணி மேம், சரத் சாருக்கு நன்றி. நிறைய சீன்களில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துயாய், நார்த் அமெரிக்கா, நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி".
பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ’ஆர்யன்’.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் .கே. விஷ்ணு விஷால் நடித்த ’எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், “எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள் தான் நன்றி. க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் 200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். என் மனைவி ஜிவாலாவிற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார். தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக, உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி.” என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன் பேசுகையில், “என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.” என்றார்.
இயக்குநர் செல்வராகவன் பேசுகையில், “விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை. அவர் என்னை சந்தித்து, படம் செய்ய வேண்டும் என அணுகி, அவருடன் வேலை பார்த்த போது தான், அவரை பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவை காதிலிக்கிற நேசிக்கிற, மதிக்கிற, ஹீரோ. அதே போல் இயக்குநர் பிரவீன், அவரும் அப்படித் தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும். நன்றி.” என்றார்.
இந்நிகழ்வினில் எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் பேசுகையில், “எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதே போல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர் அவர் தான் இயக்குநர், விஷ்ணு என் முதல் ஹீரோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹீரோ அவர்தான். பிரவீனும் நானும் கௌதம் மேனனிடம் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். சினிமாவை ஒன்றாக விவாதிப்போம். விஷ்ணு விஷால் கதை கேட்ட போது நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். இந்தக் கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகிய போது மகிழ்ச்சியாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை. அக்டோபர் 31 படம் பார்க்கும் போது பிரவீன் திறமை உங்களுக்கு புரியும். எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தையும் நம்பி தயாரித்துள்ளார். போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்! ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார். ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும்.” என்றார்.
கலை இயக்குநர் ஜெயச்சந்திரன் பேசுகையில், “இந்தப்படத்தில் மிக முக்கியமான சீக்குவன்ஸ்க்காக ஒரு பெரிய செட் போட்டுள்ளோம். அனைவரும் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள். நன்றி.” என்றார்.
எடிட்டர் ஷான் லோகேஷ் பேசுகையில், “ஆர்யன் மிக முக்கியமான படம், இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது. வில்லனின் ஆர்க்கையே முழுதாக மாற்றியுள்ள படம். விஷ்ணு சார் ஒரு நாள் ராட்சசன் ஷீட்டில் பார்த்த போது ஒரு ஷாட்டில் கண் சிமிட்டியிருக்கிறேன் அதைப் பார்த்து எடிட் செய்யுங்கள் என்றார். அவரது அப்சர்வேசன் அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. அவர் பணத்தை பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டார். படம் சரியாக வர வேண்டும் தான் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாக காதலிக்கும் ஒருவர். ஜிப்ரான் சார் எங்களுக்கு கிடைத்த வரம். செல்வா சாரின் காதல் கொண்டேன் படம் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் அவர் கண்ணே பல விசயங்கள் பேசும். படம் பார்த்தால் புரியும் அருமையாக நடித்துள்ளார், படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், ”எல்லோரிடமிருந்தும் ராட்சசன் மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும். அது இசையில் சவாலாக இருந்தது. இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும், ஆனால் அதன் பிறகு தான் கதை தொடங்கும். செல்வா சார் நடிப்பிற்கு மியூசிக் செய்தது சந்தோசமாக இருந்தது. மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான் தான். எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார். ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப்படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன், ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் கருணாகரன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ஓஹோ எந்தன் பேபி படத்தின் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆர்யன், ராட்சசன் கம்பேரிங்கை தடுக்க முடியாது. ஆர்யன் எனக்கு பிடித்த படம். பிரவீன் ரொம்ப காம்ப்ளிகேடட் கதையை பிரில்லியண்டாக எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் போலீஸ் கதாப்பாத்திரத்தை மிக அட்டகாசமாக செய்துள்ளார். அவர் கடினமான உழைப்பாளி. தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை விஷ்ணுவுடன் இருந்து பார்த்தேன். இந்தப்படத்தில் நியூஸ் ரீடர் ரோல் செய்துள்ளேன், இருப்பதிலேயே கஷ்டமான ரோல். செல்வா சாரின் மிகப்பெரிய ஃபேன். அவர் மிகப்பெரிய ரோல் செய்துள்ளார். எல்லோரும் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை மானசா சௌத்திரி பேசுகையில், “ஆர்யன் எனக்கு மிக முக்கியமான படம். ஜிப்ரான் சார் ரசிகை நான். அவர் பாடல்களை தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஹரீஷ் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். செல்வா சார் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பிரவீன் சார் எனக்கு நல்ல ரோல் தந்ததற்கு நன்றி. விஷ்ணு விஷால் சாரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. படம் அனைவரும் பாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசுகையில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். அக்டோபர் 31 எங்கள் படம் வருகிறது. என் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் சாருக்கு முதல் நன்றி. அவரை தயாரிப்பாளராகத்தான் முதலில் சந்தித்தேன். அவர் இவ்வளவு உழைப்பைப் போட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளார். அவர் தந்த ஊக்கத்திற்கும் என்னை தேர்ந்தெடுத்ததிற்கும் நன்றி. அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. செல்வா சாருடன் ஷீட்டில் எதிரில் உட்கார்ந்திருந்ததே பயமாக இருந்தது. அவர் மீது பெரும் மரியாதை உள்ளது. பிரவீன் அற்புதமான கதை சொல்லி. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். ஜிப்ரான் சாரிடம் பெரிய திறமை உள்ளது. அவர் பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ஹரிஷ் நல்ல விஷுவல்ஸ் தந்துள்ளார். இது ஒரு க்ரைம் ஸ்டோரி, ஷான் சிறப்பாக எடிட் செய்துள்ளார். மானசா உங்களுக்கு அழகுடன் திறமையும் இருக்கிறது வாழ்த்துகள். உங்களுடன் நானும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.” என்றார்.
இயக்குநர் பிரவீன்.கே பேசுகையில், “இன்று நான் நானாக இருக்க காரணமான என் அப்பா அம்மா மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி. எஃப் ஐ ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்ற விதம் பிரமிப்பானது. இந்தக்கதையை ரவிதேஜா சார், அமீர் சார் என பல நடிகர்களிடம் எடுத்து சென்றோம். இதை இந்தியிலும் செய்வதாக இருந்தது. பல தடைகள் வந்த போதும் அவர் இப்படத்தை தாங்கினார். இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம். ஷ்ரத்தா மிக திறமையானவர், அவர் தான் இந்த ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். சிறப்பாக செய்துள்ளார். மானசா நல்ல திறமைசாலி அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன், அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர். எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும்.” என்றார்.
இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!
காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.
ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான காசிக்கு (வாரணாசி) பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.
தக்ஷன காசியிலிருந்து காசிவரை அவரின் இந்த ஆன்மீகப் பயணம், பக்தி, நன்றியுணர்வு மற்றும் நம் மரபை போற்றும் வெளிப்பாடாக திகழ்கிறது — இது காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் பிரதிபலிக்கும் அதே ஆன்மீக சாரத்தையும் இந்தப்பயணம் வெளிப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் இருந்து இப்படத்தின் மீது காட்டப்படும் அன்புக்கும் ஆதரவுக்கும் காந்தாரா குழுவினர் பெரும் மகிழச்சியோடு, இந்தச் சினிமாவை ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வாக மாற்றியதற்கு, மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறார்கள்.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!
தமிழ் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் தீபாவளி மலர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா, அக்டோபர் 18 ஆம் தேதி மாலை சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் மக்கள் குரல் ராம்ஜி, அனுபமா, தர்ட் ஐ பிரகாஷ் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜன், நடிகர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக், பொருளாளர் ஏ.மரிய சேவியர் ஆகியோரது தலைமையின் கீழ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசியதோடு, தமிழ் சினிமாவின் மூத்த நிருபர்களால் தொடங்கப்பட்ட சங்கத்திற்கு புதிய இரத்தத்தை பாய்ச்சி, புத்துயிர் வழங்கி திறம்பட செயல்பட்டு வரும் நிர்வாகிகளையும் பாராட்டினார்கள்.
மேலும், அக்காலத்தில் சுமார் 15- க்கும் மேற்பட்ட நிருபர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஊடகத்துறையின் அதீத வளர்ச்சியால் இன்று நிரர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களின் முழுமையான பின்னணியை ஒருவருக்கொருவர் அறியாத சூழல் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றி, ஒவ்வொரு நிருபர்களின் பின்னணியை சேகரித்து, அதைபாவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மூத்த நிருபர் மக்கள் குரல் ராம்ஜி முன் வைத்தார்.
பட்டாசு, புத்தாடை, இனிப்பு, முறுக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி சினிமா பத்திரிகையாளர்கள் இல்லத்தில் ஒவ்வொரு தீபாவளியன்றும் மகிழ்ச்சி என்ற தீபத்தை ஏற்றும் சினிமா பத்திகையாளர் சங்கத்தின் இத்தகைய சிறந்த பணி மேலும் சிறக்க வேண்டும், என்று திரை பிரபலங்கள் வாழ்த்தினார்கள்.
தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'டீசல்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவு அதிகரித்திருக்கும் நிலையில், நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸில் படம் ஹிட் ஆகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி தெரிவிக்கிறது.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன் பகிர்ந்து கொண்டதாவது, "கதையின் தனித்தன்மை, அது எந்தளவுக்கு பார்வையாளர்களை கட்டிப் போடுகிறது, அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்ற இந்த இரண்டு விஷயங்களைத்தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் கவனிக்கும்.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி 'டீசல்' கதையை சொன்னபோது இந்த இரண்டு விஷயங்களும் பொருந்திப் போனது. கச்சா எண்ணெய் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத பல அதிர்ச்சிகரமான விஷயங்களை 'டீசல்' பார்வையாளர்களுக்கு தெரியப்படுதும்.
கதை இறுதியானதும் இதில் நடிக்க நட்சத்திர அந்தஸ்துடன் அதே சமயத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாகத் தேடினோம். ஹரிஷ் கல்யாண் 'டீசல்' கதைக்கு சரியாக பொருந்திப் போனார். படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்தபோது பவர் பேக்ட்டான சிறப்பான நடிப்பைக் கொடித்திருக்கிறார் ஹரிஷ். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னியிருக்கிறார். இந்த தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்" என்றார்.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மென்ட் சார்பில் தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்திருக்க, எஸ்பி சினிமாஸ் புரொடக்ஷனில் உருவாகியுள்ள 'டீசல்' படத்தை சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!
இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'டியூட்' உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார்.
மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 'டியூட்' திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான 'ஊரும் பிளட்டும்...' முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, " என் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமாத்துறையில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மைத்ரி கோலிவுட்டில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'குட் பேட் அக்லி' மூலம் அடியெடுத்து வைத்தது. அப்படி இருக்கையில் அவர்கள் தமிழில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அனுபவம் வாய்ந்த பெரிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது. இதற்கு நன்றி!" என்றார்.
மேலும் பேசியதாவது, "'டியூட்' திரைப்படத்தில் நாங்கள் பணிபுரிய தொடங்கியபோது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பிடித்த ஹீரோவாக வளர்ந்து வருகிறார் பிரதீப். படத்தில் அவரது கதாபாத்திரம் முலம் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். பிரதீப்பும் அதை சரியாக புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்".
படம் பற்றி கேட்டபோது, "ரசிகர்களுக்கு தீபாவளிக்கு சிறந்த பரிசாக எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜாக 'டியூட்' இருக்கும். மமிதா பைஜூ, சரத்குமார் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்து நிச்சயம் 'டியூட்' திரைப்படம் முழுமையான எண்டர்டெயினராக இருக்கும்" என்றார்.
நகைச்சுவை, ஹீரோயிசம் மற்றும் எமோஷன் என உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!
வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டீசல்' படம் மூலம் ஆக்ஷன் ஜானரிலும் அடியெடுத்து வைக்கிறார் ஹரிஷ் கல்யாண். அவரது கரியரில் மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'டீசல்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து கொண்டதாவது, "தங்கத்தை விடவும் பெட்ரோல் -டீசல் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது. குறிப்பாக, பிளாக் கோல்ட் எனப்படும் கச்சா எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தப்படும் வளம். நாம் அடிக்கடி பெட்ரோல் பங்க் செல்வோம். ஆனால், அதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி அரிதாகவே யோசிப்போம். இந்த படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இந்த படத்தை அர்த்தத்தோடும் நோக்கத்தோடும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறோம்.
பிசியாக உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்துவது சவாலானதாகவும் அதேசமயம் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. இயக்குநர் சண்முகம் முத்துசாமி இந்த கதைக்கு பின்னால் செய்திருக்கக் கூடிய ஆராய்ச்சியும் தகவல்களும் என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது. அவருடைய திரைக்கதை ஆழம் எப்படி என்னை வியப்புக்குள்ளாக்கியதோ அது போலவே ரசிகர்களும் விரும்புவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "இந்த படம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு சவாலானதாக இருந்தது. வசனம் பேசுவதில் இருந்து பாடல்கள், தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவற்றிற்கும் கடுமையான உழைப்பு கொடுத்து இருக்கிறேன். இந்த படத்தின் மெசேஜும் ரொம்பவே திருப்தியாக வந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்கள் என் நடிப்பை விரும்பினார்கள் என்றால் இன்னும் இது போன்று பல ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்".
"தீபாவளி பண்டிகை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். பல பெரிய படங்களை இந்த பண்டிகைக்கு பார்த்து கொண்டாடியிருக்கிறேன். ஆனால், இந்த முறை என்னுடைய படமே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியாகிறது என்பது புது அனுபவமாக உள்ளது. இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. எங்களுடைய உழைப்பை ரசிகர்கள் நிச்சயம் மதிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மென்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் 'டீசல்' படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை எஸ்பி சினிமாஸ் வழங்குகிறது. சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகீர் ஹூசைன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது.
இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும் மனம்கொண்டவராக கொண்டாடப்படும் சிரஞ்சீவி, திலக் வர்மாவை அன்புடன் வரவேற்று, கௌரவிக்கும் விதமாக அவரின் தோளில் சால்வை போர்த்தி, அவரது மாட்ச்-வின்னிங் தருணத்தை பதிவு செய்த, சிறப்பான புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும் சிரஞ்சீவி, திலக் வர்மாவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, அஞ்சாத மனநிலை ஆகியவற்றை பாராட்டி, “இவை வாழ்க்கையிலும் வெற்றிக்கான அடித்தளங்கள்” எனக் கூறி உற்சாகமூட்டினார்.
இந்த நிகழ்வு, சிரஞ்சீவியின் புதிய தலைமுறை திறமைகளை மதிக்கும் மனப்பான்மையையும், எல்லா துறைகளிலும் சிறந்தவர்களை கௌரவிக்கும் அவரது பாராட்டும் குணத்தையும் இயல்பையும் வெளிப்படுத்தியது.
இந்த சிறப்பு தருணத்தில், நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி, தயாரிப்பாளர்கள் சாஹு கரப்பாட்டி மற்றும் சுஷ்மிதா கோனிடேலா ஆகியோரும் பங்கேற்று, திலக் வர்மாவின் சாதனையைப் பெருமையுடன் பாராட்டினர்.
தனது சாதனைக்கு மெகாஸ்டாரிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரம், திலக் வர்மாவுக்கு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. ரசிகர்களுக்கு இது, சிரஞ்சீவியின் மனிதநேயமும், தாழ்மையும், ஊக்கமூட்டும் தன்மையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திய சிறப்பு நிகழ்வாக இருந்தது.
இந்த மனமகிழ்ச்சியான செயல் மூலம், சினிமாவின் வழியிலோ அல்லது வேறெந்த வழியிலுமோ “உண்மையான மகத்துவம் என்பது பிறரைப் பாராட்டி உயர்த்துவதில் தான் இருக்கிறது” என்பதை சிரஞ்சீவி மீண்டும் நிரூபித்துள்ளார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா