சற்று முன்

4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |   

சினிமா செய்திகள்

இக்னைட் பிக்சர்ஸ் வழங்கும் - டாலர் தேசம்
Updated on : 07 April 2015

 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் "இக்னைட் பிக்சர்ஸ்" நிறுவனத்தாரின் முதல் படைப்பு "டாலர் தேசம்"


அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது டாலர் தேசம்.


பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள
மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.


சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.


நவீன திரைக்கதை உத்தியோடு சொல்லபட்டிருக்கும் இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.


பருத்தி வீரன், யோகி படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக அவதாரம் எடுத்து அறிமுகமாகிறார்.


பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜீயிடம் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றிய பிரசாத் வி குமார் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 


மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மூடர்கூடம் படங்களில் பணியாற்றிய அத்தியப்பன் சிவா, படத்தொகுப்பை கையாள்கிறார். பாடல்கள் சினேகன்.


படத்திற்கு வசனம் – சுந்தர் மற்றும் இந்திரஜீத்.


மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரியும் இத்திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா