சற்று முன்

வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |    பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் அரங்கேற்றப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல்!   |    நகரின் சுழற்சியும் குடும்ப உறவுகளும் கலந்த “கான் சிட்டி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!   |    “VVVSI.com” கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதளம் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்   |    விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்   |    “காந்தி டாக்ஸ்” வார்த்தைகளின்றி உணர்ச்சிகளை உருமாற்றும் புதிய திரைப்பட டீசர் வெளியாகியது   |    'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு   |    நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு   |    சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு   |    பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!   |    காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’   |    ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |   

சினிமா செய்திகள்

அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!
Updated on : 18 June 2025

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக  இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில்,  காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது. 



 



காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது. 



 



மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ்  திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். 



 



இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, 'விடுதலை' சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள்.



 



சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில்,  ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக  இரட்டை இயக்குநர்கள்  எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர். 



 



எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர். 



 



கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. 



 



இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா