சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

நமீதா - வீரா காதல் டூ கல்யாணம்!
Updated on : 10 November 2017

பிரபல நடிகை நமீதா - தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீரா திருமணம் வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.



 



இருவரின் காதல் மற்றும் திருமணம் பற்றி நமீதா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம், நானும் வீராவும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி உங்களை இந்நேரம் வந்தடைந்திருக்கும். வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம்.



 



 எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.



 



இருவருக்குமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன். இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா