சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கோபி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புத்துணர்ச்சி!
Updated on : 13 November 2017

'அறம்' திரைப்படத்துக்கான ஆதரவு குரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியன் பனோரமாவில் இப்படத்தை இணைக்க குரல் கொடுக்க வேண்டுமென்று திரைப்பட செயல்பாட்டாளர் தமிழ் ஸ்டூடியோ அருண் வலியுறுத்தியுள்ளார்.



 



இந்நிலையில், குடும்பத்துடன் இப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன், கோபி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புத்துணர்ச்சி என்று பாராட்டியுள்ளார்.



 



'அறம்' - மிகச்சிறந்த அரசியல் திரைப்படம்இன்று என் குடும்பத்தினருடன் 'அறம்' திரைப்படம் பார்த்தேன். மிகவும் நேர்த்தியான திரைப்படம், இயக்குநர் கோபி அவர்கள் இந்த கதையை கையாண்ட விதமும், திரைக்கதை அமைத்த விதமும் மிகவும் அருமை.



 



நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை அனைத்தும் மிகவும் நேர்த்தி. நயன்தாரா-க்கு அவருடைய திரையுலக வாழ்வில் அற்புதமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளார்.



 



இப்படத்தில் நடித்த அப்பெண் குழந்தை, குழந்தையின் அண்ணன், குழந்தையின் அம்மா, குழந்தையின் அப்பா, எம்.எல்.ஏ என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அக்குழந்தையின் அப்பாவாக நடித்திருந்த ராமச்சந்திரன் எனது நீண்டக்கால நண்பர்.



 



அனேக நாடக நடிகர்களை பயன்படுத்தி அவர்களுக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் கோபி அவர்களுக்கு நன்றி. இயக்குநர் கோபி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புத்துணர்ச்சி" என்று அவரது ட்விட்டரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா