சற்று முன்
சினிமா செய்திகள்
இரண்டாவது படத்தில் அதர்வா!
Updated on : 28 December 2017
'இந்தியா பாகிஸ்தான்' படத்தை இயக்கிய N.ஆனந்த் இயக்கும் இரண்டாவது படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.
தற்போது அதர்வா நடிப்பில் 'இமைக்கா நொடிகள்', 'செம்ம போத ஆகாதே' ஆகிய படங்கள் இறுதி நிலையில் உள்ளன.
இதன்பின்னர் அவர் N.ஆனந்த் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகள்
’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார்.
திரவ் எழுதி இயக்கியுள்ள ’மெல்லிசை’ படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் ’மெல்லிசை’ படத்தையும் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்கான ஆன்மாவை திரையில் கொண்டு வந்துள்ளது. ’மெல்லிசை’ 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ‘மெல்லிசை’ கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம்” என்றார்.
படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள்: ரொமாண்டிக் எண்டர்டெயினரான இந்தப் படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானியை அறிமுகப்படுத்துகிறது படக்குழு.
நடிகர் சிராக் ஜானியை தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம். துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.
சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.
பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணி ரத்னம் சார் பின்பற்றும் 'சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்' என்பதின் அடிப்படையில் பல சவால்களை தாண்டி இதை படமாக்கினேன்” என்றார்.
மேலும் பேசியதாவது, “படம் உருவாக்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. அவரது ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அர்ப்பணிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பும் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படும்.
ரவி மோகனின் திரை ஆளுமை ‘பராசக்தி’ படத்தின் அசைக்க முடியாத பெரும்பலம். இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்ததற்கு நன்றி. திரைக்கதை எழுதும் போதே அதர்வா முரளியின் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தியது. அதர்வாவின் அர்ப்பணிப்பால் நான் எதிர்பார்த்ததைவிட திரையில் அவர் கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்துள்ளது. நடிகை ஸ்ரீலீலாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். அற்புதமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
எனது படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை பெரும் பலம். ’பராசக்தி’ படத்தில் அவரது இசையை நிச்சயம் ரசிப்பீர்கள். ’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனியிடம் பிடிக்கும்” என்றார்.
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தை மறுஉருவாக்கும் செய்திருக்கும் ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!
வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது வலுவான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் குறித்தான தனது மகிழ்வான அனுபவங்களை ஸ்ரீலீலா பகிர்ந்து கொண்டுள்ளார்.
”’பராசக்தி’ திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மேடத்திற்கு நன்றி” என்றார்.
மேலும், “சிவகார்த்திகேயன் சாரின் வெற்றி வெறும் விடாமுயற்சியால் மட்டுமே வந்தது அல்ல, அவரின் நல்ல எண்ணங்களும் இதில் உள்ளது. நடிகர்களிடம் மட்டுமல்லாது படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இந்த குணம்தான் அவரை கோடிக்கணக்கானவருக்கு பிடித்தமானவராக மாற்றியிருக்கிறது.
ரவி மோகனின் நடிப்பு எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘பராசக்தி’ படத்தில் அவரின் நடிப்பை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
”நடிகர் அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்” என்றார்.
”நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ஆர்யமாலா’வுக்கு என் மனதில் எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. ’பராசக்தி’ படத்தில் இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு மிகவும் நன்றி. ’பராசக்தி’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!
வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "’பராசக்தி’ சாதாரண படம் அல்ல! எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் ’பராசக்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் சுதா கொங்கரா மேடம் தான். அவரது படங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.
”அதர்வா முரளி ஒரு அற்புதமான சக நடிகர். அவரது பாசிட்டிவ் எனர்ஜியை செட்டில் எல்லோரும் உணர்ந்தோம். இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. ஸ்ரீலீலா அற்புதமான நடிகை. ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்”.
”சிவகார்த்திகேயன் மீது எனக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. பல தருணங்களில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படத்தில் அவர் மற்றவர்களை ஓவர்ஷேடோ (overshadowed) செய்கிறார் என்று ஒரு செய்தி உலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. என்னுடைய கதாபாத்திரம் ஆழமானதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் அப்படி செய்வார்களா என தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அன்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் அவரது வளர்ச்சிக்கு காரணம்” என்றார்.
”குறுகிய காலத்திலேயே நூறு படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘பராசக்தி’ படத்தில் அவரது அற்புதமான இசையை நிச்சயம் விரும்புவீர்கள்”.
”’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். படம் வெளியாவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளேன். படம் பார்த்த பெருமையிலும் சந்தோஷத்திலும் சொல்கிறேன், நிச்சயம் ‘பராசக்தி’ உங்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை ’பராசக்தி’ திரைப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!
' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!' யாஷ்ஷின் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது.
'ராக்கிங் ஸ்டார்' யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.
யாஷ் 'டாக்ஸிக்' திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா - ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் 'டாக்ஸிக்' திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.
அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.
ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்... அசைக்க முடியாத உறுதியுடனும்... முழுமையான கட்டுப்பாடுடனும்... ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun) அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.
அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல... அவர் நோக்கம் - தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.
அதன் முதல் காட்சியிலிருந்து' டாக்ஸிக்' ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.
இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது... 'டாக்ஸிக்' ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல... அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.
பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்... சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான... அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.
'டாக்ஸிக்' அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.
நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்... இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம் பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும், நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ் ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் 'டாக்ஸிக்' படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.
இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
“ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!
வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘பராசக்தி’ படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும் இந்தப் படம் வெளியான பிறகு இந்திய சினிமாத்துறையில் நிச்சயம் பேசுபொருளாகும்” என்றார்.
மேலும் பேசுகையில், “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் அவரது நடனத்தை என் குடும்பத்தினருடன் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. மழையில் அவர் தனியாக நடனமாடும் ஒரு குறிப்பிட்ட காட்சியை மிகவும் ரசித்து பார்த்தோம். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் என என் அம்மா அடிக்கடி சொல்வார். ரவியின் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தேன்” என்றார்.
”சுதா மேடத்தை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா தன்னை மேடம் என அழைக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது”.
”வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர். சினிமாவில் அவரது வளர்ச்சியை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. உங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான 'மட்டி' திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ஜாக்கி'.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் 'ஜாக்கி', மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது.
'ஜாக்கி' திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான 'மட்டி' திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.
'ஜாக்கி' திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 3) மாலை நடைபெற்ற 13ம் ஆண்டு வீதி விருது விழாவில் வெளியிடப்பட்டது. டீசரை கண்ட பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!
பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர் யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர்.
வரும் ஜனவரி 8 அன்று நடிகர் யாஷ் பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறி, ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மெட்ரோ பெங்களூர் நகரத்தின் மையப்குதிகளைக் கடந்து செல்லும் போது, அது வெறும் பயணிகளை மட்டுமல்ல — உணர்ச்சி, பெருமை மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நேசத்தையும் எடுத்துச் சென்றது. திரையரங்குகளைத் தாண்டி, சமூக-கலாச்சார அடையாளமாக யாஷ் இன்று உருவெடுத்திருப்பதற்கான உறுதியான சான்றாக இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த நிகழ்வின் நேரம் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் நடிகைகள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியதிலிருந்து, யாஷின் அடுத்த சினிமா பயணம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்படத்தில் யாஷின் தோற்றம் குறித்த சில வலுவான புகைப்படங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் முழுமையான தன்மை இன்னும் மர்மமாகவே உள்ளது. அந்த மர்மமே ரசிகர்களிடையே தீவிரமான ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
நடிகர் யாஷின் பிறந்தநாளில் அந்த பெரும் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மிகப் பெரிய அளவில் உருவாகும் இந்த திரைப்படம், ஒரு வரலாற்று காலகட்டப் பின்னணியுடன், தீவிரமும் ஆழமும் நிறைந்த உலகை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது. நெறிமுறைகளின் எல்லையில் நிற்கும் ஒரு சிக்கலான நாயகன் — அவன் யார்? என்பதை வெளிப்படும் அந்த தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- உலக செய்திகள்
- |
- சினிமா













