சற்று முன்

’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    “மூன்வாக்” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் ரசிகர்கள்!   |    இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு - நடிகர் ரவி மோகன்   |    அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள “ஃபாதர்”!   |    விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் “காந்தி டாக்ஸ்” - 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது!   |    பால் தினகரன் தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை   |    கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |   

சினிமா செய்திகள்

அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!
Updated on : 08 January 2026

வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார்  நடிகை ஸ்ரீலீலா.  தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது வலுவான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் குறித்தான தனது மகிழ்வான அனுபவங்களை ஸ்ரீலீலா பகிர்ந்து கொண்டுள்ளார். 



 



”’பராசக்தி’ திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மேடத்திற்கு நன்றி” என்றார். 



 



மேலும், “சிவகார்த்திகேயன் சாரின் வெற்றி வெறும் விடாமுயற்சியால் மட்டுமே வந்தது அல்ல, அவரின் நல்ல எண்ணங்களும் இதில் உள்ளது. நடிகர்களிடம் மட்டுமல்லாது படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இந்த குணம்தான் அவரை கோடிக்கணக்கானவருக்கு பிடித்தமானவராக மாற்றியிருக்கிறது. 



 



ரவி மோகனின் நடிப்பு எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘பராசக்தி’ படத்தில் அவரின் நடிப்பை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.



 



”நடிகர் அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்” என்றார்.



 



”நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ஆர்யமாலா’வுக்கு என் மனதில் எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. ’பராசக்தி’ படத்தில் இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு மிகவும் நன்றி. ’பராசக்தி’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்” என்றார். 



 



டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா