சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

ரஜினியின் அரசியல் போர் ஆரம்பம்
Updated on : 31 December 2017

இருபது ஆண்டுகளாக ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று காலை ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவித்துள்ளார். 



 



முதலில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி தனக்கு அரசியலில் வருவது பற்றி பயம் இல்லை மீடியாவை பார்த்துதான் பயம். சோ அடிக்கடி என்னிடம் கூறுவார் மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இன்று அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு பக்க பலமாக இருந்திருப்பார். 



 



நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதில் போட்டயிடப்போவது இல்லை. 



 



பணம், பதவி ஆசை எனக்கு இல்லை. நான் பதவிக்காக இல்லை அரசியல் மிகவும் கெட்டுவிட்டது, ஜனநாயகம் சீர் குலைந்துவிட்டது. கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டது. வேற்று மாநிலங்கள் நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது. இதனால் நான் மிகவும் வருந்துகிறேன்.



 



ஜாதி மத வேறுபாடின்றி ஒரு ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் எனக்கு தொண்டர்கள் வேண்டாம் தவறுகளை தட்டி கேட்கும் காவலர்களே தேவை. கொள்ளையடிக்கும் ஆட்சி முறையை மாற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். 



 



உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே என் தாரக மந்திரம். சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன். சட்டமன்ற தேர்தல் வரும்வரை இந்த விஷயங்களை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் மக்களிடம் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 



இவ்வாறு ரஜினி மக்களுக்கு தன்னுடைய அரசியல் முடிவு பற்றி அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா