சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

5 ஆயிரம் பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அஜீத்: ராதாரவி!
Updated on : 24 April 2018

நடிகர் அஜீத், 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.



நடிகர் அஜீத் சினிமாவில் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, நிஜத்தில் நல்ல மனிதரும் கூட. இவர் நடிக்க ஒவ்வொரு படத்துக்கும் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை உதவிக்கென்று ஒதுக்கி விடுவாராம். இந்த நல்ல பழக்கம் அவர் நடித்த முதல் படத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜீத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இதில் ‘‘மறைந்த முன்னாள் நடிகர் ஜெயசங்கரின் மகன்தான் விஜய் சங்கர். இவர் பிரபல கண் மருத்துவர். இவருக்கு சொந்தமாக சென்னையில் கண் மருத்துவமனை உள்ளது. இதுவரை விஜய் சங்கர் அளித்த சிகிச்சையால் 60 ஆயிரம் கண் ஒளி பெற்று பயனடைந்துள்ளனர். 



இந்த 60 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு நடிகர் அஜீத்தான் பண உதவி செய்தாராம். இந்த தகவலை கண் மருத்துவர் விஜய் சங்கரே என்னிடம் சொன்னார்’’ என்று ராதாரவி மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா