சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

ரொமாண்டிக் காமெடி வலைத்தொடர் வரும் ஜூலை 24 முதல் 'Viu'வில் ஒளிபரப்பு
Updated on : 16 July 2018

'நிலா நிலா ஓடிவா' என்ற வரிகளை தலைப்பாக கேட்டவுடனே நாம் நிச்சயம் இது  'குழந்தைகள்' பற்றி ஏதேனும் ஒன்றாக தான் இருக்கும் என்று யூகிப்போம். ஆனால் ஆச்சரியமான ஒரு திருப்பமாக அது ஒரு வாம்பயர் சார்ந்த ரொமாண்டிக் காமெடி. வலைத் தொடர் உலகம் என்பது புதிய விஷயங்ளை செய்ய ஒரு பரந்த அளவிலான வாய்ப்பை வழங்குகிறது. 'வாம்பயர்' கதைகள் ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய திரைப்படத் துறையில் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், நமது சொந்த தமிழ் தொழில் துறையில் உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் 'Viu' மூலம் பரிச்சயம் ஆக இருக்கிறது.  அஸ்வின் காகமானு மற்றும் சுனைனா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க நிலா நிலா ஓடி வா' என்ற வலைத்தொடர் மூலம் இயக்குனர் ஜேஎஸ் நந்தினி இதனை முயற்சி செய்கிறார்.



டிஜிட்டல் தளத்தின் உலகில் வலுவான வெற்றியாளராக வளர்ந்து வரும் 'Viu' ஏற்கனவே பல்வேறு கூறுகளின் மூலம் எல்லோருடைய ஆர்வத்தையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் காமெடி வலைத்தொடர் வரும் ஜூலை 24 முதல் 'Viu'வில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Viu பற்றி புகழ்ந்து பேசும் நந்தினி கூறும்போது, "தயாரிப்பாளர்களுக்கு இணங்கி சில படைப்பு சமரசங்கள் செய்யும் இந்த காலச்சூழலில், ஒரு படைப்பாளர் அல்லது இயக்குனர் முழு சுதந்திரத்தை வெளிப்படுத்துவது என்பது எளிதான விஷயம் அல்ல. எனினும், Viu ஒரு முழுமையான விதிவிலக்காக இருந்தது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான அணுகுமுறை மட்டுமல்லாமல், ஒரு இயக்குனராக எனக்கு அவர்கள் முழு சுதந்திரம் வழங்கியதும் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.



முன்னணி நடிகர்களின் கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறும்போது, "அஸ்வின் ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது. தன் கதாபாத்திரம் முழுமை அடைவதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார் அஸ்வின். கதாபாத்திரத்திற்காக நிறைய பச்சை குத்திக் கொள்வார், முன்பை விட மிகச்சிறப்பான, முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுனைனா ஒரு வாம்பயராக நடிக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரது அழகிய தோற்றம் மற்றும் தனிச்சிறப்பான நடிப்பு ஆகியவை நிபந்தனையற்ற வகையில் கலந்து கதாபாத்திரத்திற்கு உயிராக அமைந்தன.



ஸ்ரீகிருஷ்ணா தயாள், அஸ்வத், கேப்ரியலா, மிஷா கோஷல், அனுபமா குமார், அபிஷேக் வினோத், பிரவீன், ஷிரா மற்றும் ஹரிஷ் என மிகச்சிறப்பான நடிகர்கள் இந்த தொடரில் நடித்திருப்பது இயக்குனருக்கு மேலும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.



ஒரு வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் - காமெடி வார்த்தைகளில் வரையறுக்க அல்லது ஸ்கிரிப்ட்டை விவரிக்க எளிதானதாக இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய சவால் வலுவான தொழில்நுட்பக் குழுவின் கையில் தான்  உள்ளது. இயக்குனர் நந்தினி மேலும் கூறும்போது, "ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார்கள். இந்த வகை சினிமாவுக்கு இருண்ட மற்றும் பயமுறுத்தும் வகையில் காட்சிகள் தேவை என்பதால், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் பாரம்பரிய திரைப்பட செட் லைட்டிங் அல்லாமல், சாதாரண  விளக்குகளையே பயன்படுத்தினார். டாட்டூ ஸ்டுடியோ தான் கதையின் மையம் என்பதால்  கமல் (கலை இயக்குனர்), விஜய் மற்றும் நான் ஒரு வித்தியாசமான தோற்றத்தை, வாம்பயர் அடிப்படையிலான காட்சிகளுக்காக அமைக்க வேண்டியிருந்தது. இசையமைப்பாளர் அஸ்வத்தின் பின்னணி இசை, மூன்று அழகான பாடல்கள், மற்றும் ஒரு நவநாகரீக தலைப்பு பாடல் அனைவராலும் கண்டிப்பாக கவனிக்கப்படும். பிரபு சந்திரசேகர், வியக்க வைக்கும் வகையில் சண்டை காட்சிகளை வழங்கியுள்ளார். இது ஒரு பெரிய ஆக்‌ஷன் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு இணையாக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா