சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

மோகன்லால், நிவின் பாலி, பிரியா நடிக்கும் காயம்குளம் கொச்சூன்னி
Updated on : 26 July 2018

சினிமாவில் நாம் பார்க்கும் சில கதாபாத்திரங்கள் நம் வீட்டிற்கு நம்முடனே வந்து விடுகின்றன. பாகுபலி படத்தில் பார்த்த பாகுபலி, பல்லா தேவா, தேவசேனா, கட்டப்பா, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரங்கள் என்றும் நம் மனதை விட்டு மறைந்து போவதில்லை. மோகன்லால், நிவின் பாலி, பிரியா ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஸ்ரீகோகுலம் கோபாலன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் காயம்குளம் கொச்சூன்னி. தயாரிப்பு  செலவின் அடிப்படையில்  மிகப்பெரிய படமான, இந்த படத்தின் வெளியீட்டு தேதியை சினிமா வர்த்தகத்தில் அனைவரும் எதிர்நோக்கி வருகிறார்கள்.



"மிகுதியான ஆராய்ச்சி பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் பீரியட் படங்களை உருவாக்குவது என்பது எளிது. ஆனால் மிகவும் சொற்பமான குறிப்புகளை வைத்துக் கொண்டு, 30 நிமிடங்கள் அளவில் கூட சினிமாவை எடுக்க முடியாது. எனவே இதை வேறு ஒரு விதத்தில் அணுகுவது என்று முடிவு செய்தோம். முடிந்தவரை பல கேள்விகளை திரைக்கதை எழுதும்போது உருவாக்கி, திரைக்கதையை தொடர்ந்தோம்" என்றார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.



"நாங்கள் படத்தின் மைய கதாபாத்திரத்தின் மீது மட்டுமே ஆய்வு செய்யாமல், சில புகழ்பெற்ற மனிதர்களை பற்றிய விஷயங்களையும் அறிந்து கொண்டோம். காயம்குளம் கொச்சூன்னி காலத்தில் வாழ்ந்த ஸ்வாதி திருநாள்மற்றும் இதிக்கார பக்கி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். சர்வதேச தரத்திலான படத்தை கொடுப்பதற்கு  இந்த மாதிரியான உழைப்பு அவசியமாக வேண்டும். எங்கள் முயற்சியானது, எங்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று தரும் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் இந்த படம் விரைவில் ரசிகர்களின் கற்பனைக்கு விடையாக அமைய இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா