சற்று முன்

47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |    சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |   

சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ்
Updated on : 26 July 2018

ஒரு நடிகைக்கான மிகப்பெரிய சாதனை 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுவதோ, 'பாக்ஸ் ஆபீஸ் குயின்' ஆக இருப்பதோ இல்லை. 'நாயகி மையப்படுத்திய படங்கள்' என்ற வரையறையை அழிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் ஆண் நாயகன் இல்லாத போது, எளிதாக அதை நாயகி படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அந்த தடைகளை உடைத்து, உலகளாவிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வழிமுறை கடினமானதாக இருக்கிறது. நிச்சயமாக, நயன்தாரா இந்த சூழ்நிலையை உருவாக்க ஒரு மகத்தான முயற்சியை மேற்கொண்டார். அவருக்கு இருப்பது வெறும் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்ல, வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா'வின் வெளியீட்டை வர்த்தகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.



ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு,  தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இயக்குனர் நெல்சன்  கூறும்போது, "தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் 'சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது'. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான  விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது" என்றார்.



அனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, 'கபிஸ்கபா' என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா