சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

நந்திதாவின் அட்டகாசமான வளர்ச்சி
Updated on : 02 August 2018

 ‘அட்டக்கத்தி’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி  தமிழ் ரசிகர்களிடத்தில் ராசியான நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை நந்திதா.



 



 



இவர் தெலுங்கில் அறிமுகமான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’  என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கிலும் ராசியான நடிகை என்று பெயர் பெற்றார். இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் படு பிசியாகி விட்டார்.  தற்சமயம் இவர் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.



 



 



இது குறித்து நந்திதா கூறியதாவது,  தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் ‘சீனிவாசா கல்யாணம் ’ என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமீய பின்னணி கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்ப பாங்கான படங்களை தயாரிப்பதில் வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். 



 



 



இதற்கு முன் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிரேம கதாசித்திரம் 2 படத்திலும் நடிக்க இருக்கிறேன் இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.



 



 



தமிழில் வைபவ் உடனும், மேலும் ‘நர்மதா ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்.’ என்று கூறினார். 



 



 



இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் படு பிசியாக இருக்கிறேன் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார் நடிகை நந்திதா. 

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா