சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

இன்சூரன்ஸ் பின்னணியில் நடக்கும் மோசடி படித்தவுடன் கிழித்துவிடவும்
Updated on : 03 August 2018

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு  காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது.



இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா.



கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார்.



ஒளிப்பதிவு   -        வாசு       



இசை            -        நிரோ பிரபாகரன்



பாடல்கள்     -        மாஷா சகோதரிகள் மற்றும் அபிநந்தன்



கலை            -        இன்ப ஆர்ட் பிரகாஷ்



சண்டை       -        ஸ்டன்ட் கோட்டி



எடிட்டிங்     -        முத்துமுனியசாமி



மக்கள் தொடர்பு  -          மணவை புவன்  



இணைத் தயாரிப்பு -  சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர்



தயாரிப்பு  -  R.உஷா



கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  - செ.ஹரிஉத்ரா  ( இவர் ஏற்கனவே மீதேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்க படுகின்றன என்பதை மையமாக வைத்து “ தெருநாய்கள் “ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது )



படம் பற்றி இயக்குனர் ஹரிஉத்ரா பகிர்ந்ததுகொண்டது...



இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ்  அதுதான். அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த   “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு  இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக  திரைக்கதை அமைத்துள்ளோம்.



பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ரெட் ஹீலியம் என்ற புதுவகையான  கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது.



படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா